search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    3-வது முறையாக ரஞ்சி கோப்பையை வென்று விதர்பா அணி அசத்தல்
    X

    3-வது முறையாக ரஞ்சி கோப்பையை வென்று விதர்பா அணி அசத்தல்

    • விதர்பா அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 379 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • முதல் இன்னிங்சில் ஆடிய கேரளா 342 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டியில் விதர்பா மற்றும் கேரளா அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற கேரளா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

    அதன்படி களமிறங்கிய விதர்பா அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 379 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    அதன்பின் முதல் இன்னிங்சில் ஆடிய கேரளா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 342 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இதையடுத்து, 2 ஆவது இன்னிங்சில் ஆடிய விதர்பா அணி 5 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 9 விக்கெட் முடிவிற்கு 375 ரன்கள் எடுத்துது.

    இறுதிப் போட்டி டிரா ஆன நிலையில், முதல் இன்னிங்ஸில் கேரள அணியை விட கூடுதல் ரன்கள் எடுத்திருந்ததால் விதர்பா அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

    இதன்மூலம் 3வது முறையாக ரஞ்சி கோப்பையை வென்று விதர்பா அணி அசத்தியுள்ளது.

    Next Story
    ×