என் மலர்
கிரிக்கெட் (Cricket)
வம்பிழுத்த கான்ஸ்டாஸ்.. சுத்துப்போட்ட இந்திய வீரர்கள்- வைரலாகும் வீடியோ
- ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 9 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்துள்ளது.
- விராட் கோலியுடன் மோதலில் ஈடுபட்ட ஆஸ்திரேலிய இளம் வீரர் கான்ஸ்டாஸ் இந்த போட்டியில் பும்ராவிடம் வம்பிழுத்தார்.
ஆஸ்திரேலியா- இந்தியா அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி 185 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 40 ரன்கள் எடுத்தார்.
ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்காட் போலண்ட் 4 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும், பேட் கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளையும், நாதன் லயன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து முதலாவது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 9 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்துள்ளது.
இந்நிலையில் 4-வது டெஸ்ட்டில் விராட் கோலியுடன் மோதலில் ஈடுபட்ட ஆஸ்திரேலிய இளம் வீரர் கான்ஸ்டாஸ் இந்த போட்டியில் பும்ராவிடம் வம்பிழுத்தார். இதனால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது. முதல் நாள் ஆட்ட நேர முடிவின் கடைசி ஓவரை பும்ரா வீசினார். அந்த ஓவரின் கடைசி பந்தை எதிர் கொள்வதற்கு கவாஜா அதிக நேரம் எடுத்துக் கொண்டார். இதனால் பும்ரா நடுவரிடம் முறையிட்டார்.
இதனை நான் ஸ்ட்ரைக்கரில் இருந்த பார்த்து கொண்டிருந்த கான்ஸ்டாஸ் பும்ராவிடம் வார்த்தை மோதலில் ஈடுபட்டார். உடனே நடுவர் வந்து இருவரையும் சமாதானப்படுத்தினார். இதனையடுத்து கடைசி பந்தை வீசிய பும்ரா, கவாஜா விக்கெட்டை கைப்பற்றினர்.
KL Rahul once said 'You go after one of us, all 11 will come right back'Thats true all 11 went over him after thatwicket ??This Konstas Kid first messed with Kohli, and now he's going after BumrahSomeone should tell him he's challenging his owners pic.twitter.com/pbx3OKjyZW
— ? (@DilipVK18) January 3, 2025
விக்கெட்டை வீழ்த்திய சந்தோஷத்தில் பும்ரா உடனே கான்ஸ்டாஸ் பக்கம் திரும்பி முறைத்தார். அவர் மட்டுமல்லாமல் அனைத்து வீரர்களும் கான்ஸ்டாவை கிண்டலடித்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.