என் மலர்
கிரிக்கெட் (Cricket)

X
அரை சதம் கடந்தார் விராட் கோலி: சாம்பியன்ஸ் டிராபியில் ஷிகர் தவான் சாதனையை முறியடித்தார்
By
மாலை மலர்4 March 2025 8:17 PM IST

- இந்திய அணி வெற்றி பெற 265 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா.
- பொறுப்புடன் ஆடிய விராட் கோலி அரை சதம் கடந்து அசத்தினார்.
புதுடெல்லி:
9-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
துபாயில் நடைபெறும் முதல் அரையிறுதியில் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் விளையாடி வருகின்றன. முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 264 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கி ஆடி வருகிறது.
இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபியில் விராட் கோலி 46-வது ரன்னை கடக்கும்போது சாம்பியன்ஸ் டிராபியில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.
இதில் ஷிகர் தவான் 701 ரன்கள் எடுத்து முதலிடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
X