search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    திருப்பதியில் நேர்த்திக்கடன் செலுத்திய நிதிஷ் குமார் ரெட்டி- வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    திருப்பதியில் நேர்த்திக்கடன் செலுத்திய நிதிஷ் குமார் ரெட்டி- வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ

    • ஐபிஎல் தொடர் மூலம் அறிமுகமாகி இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்து அதில் சாதித்து காட்டியவர் நிதிஷ்குமார் ரெட்டி.
    • மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் நிதிஷ் குமார் ரெட்டி 114 ரன்கள் அடித்து அசத்தினார்.

    திருப்பதி:

    ஐபிஎல் தொடர் மூலம் அறிமுகமாகி இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்து அதில் சாதித்து காட்டியவர் நிதிஷ்குமார் ரெட்டி. வெறும் 21 வயதான நிதிஷ்குமார் ரெட்டி இந்திய அணிக்காக மூன்று டி20 போட்டிகளில் விளையாடி அதில் அதிகபட்சமாக 74 ரன்கள் அடித்திருக்கிறார்.

    இதேபோன்று ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய அணியின் ஆல்ரவுண்டராக 5 போட்டிகளிலும் நிதிஷ்குமார் ரெட்டி பங்கேற்றார். இதில் பேட்டிங்கில் அவர் மொத்தமாக 298 ரன்கள் குவித்தார். இதில் மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் 114 ரன்கள் அடித்து அசத்தினார்.

    இதேபோன்று இந்த தொடரில் பந்து வீச்சில் ஐந்து விக்கெட்டுகளை அவர் வீழ்த்தினார். பார்டர் கவாஸ்கர் தொடரில் அதிக ரன்கள் அடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்தது.

    இந்த நிலையில் தனது வாழ்க்கையே மாறிய நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நிதிஷ்குமார் ரெட்டி முட்டி போட்டு படியில் ஏறி சுவாமி தரிசனம் செய்து கொண்ட நிகழ்வு ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    கிரிக்கெட் வீரர் ஒருவர் கடின நேர்த்திக்கடனை செலுத்தியதை பார்த்து அங்கிருந்த ரசிகர்கள் கோவிந்தா! கோவிந்தா என்று முழக்கமிட்டனர். நிதிஷ்குமார் ஆட்டத்தின் மூலம் அவர் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இடம் பெற வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    Next Story
    ×