search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    விராட் கோலி ஓய்வா?.. நெவர்.. இந்த தொடர் வரை அந்த பேச்சுக்கே இடமில்லை என தகவல்
    X

    விராட் கோலி ஓய்வா?.. நெவர்.. இந்த தொடர் வரை அந்த பேச்சுக்கே இடமில்லை என தகவல்

    • தொடரின் கடைசி போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் கோலி 190 ரன்கள் ஸ்கோர் செய்தார்.
    • டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவார் என்று தகவல் பரவியது.

    இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி இப்போதைக்கு ஓய்வு பெறும் மனநிலையில் இல்லை என கூறப்படுகிறது.

    2027 ODI உலகக்கோப்பை தொடர் வரை சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி ஓய்வு பெறப் போவதில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. கடைசியாக இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் விராட் கோலி விளையாடினார்.

    தொடரின் கடைசி போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் கோலி 190 ரன்கள் ஸ்கோர் செய்தார்.

    ஆனால் 3-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா தொடரை கைப்பற்றியது. முன்னதாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவார் என்று தகவல் பரவியது.

    ஆனால் அதை அவர் மறுத்துவிட்டார். மேலும் சமீபத்தில் நட்சத்திர வீரர் அஸ்வின் ஓய்வை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×