search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    நீங்கள் லெஜண்ட்தான்... ஆனால்... ஜெய்ஸ்வால் என்னையும் ஸ்லெட்ஜிங் செய்தார்- நாதன் லயன்
    X

    நீங்கள் லெஜண்ட்தான்... ஆனால்... ஜெய்ஸ்வால் என்னையும் ஸ்லெட்ஜிங் செய்தார்- நாதன் லயன்

    • பெர்த் டெஸ்டில் ஹர்ஷித் ராணாவுடன் ஸ்டார்க் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்டார்.
    • ஜெய்ஸ்வால் ஸ்டார்க்கிற்கு பதிலடி கொடுத்திருந்தார்.

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான போட்டியின்போது வார்த்தை போர் (ஸ்லெட்ஜ்- sledge) அதிகமான நடக்கும்.

    பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்டின்போது, ஹர்ஷித் ராணா மிட்செல் ஸ்டார்க்கை பவுன்சர் மூலம் மிரட்டி முறைத்து பார்ப்பார். அப்போது ஸ்டார்க், நான் இதைவிட அதிக வேகத்தில் பந்து வீசுவேன். எனக்கு இதுபோன்ற அனுபவம் உள்ளது என்பார்.

    இந்தியா 2-வது இன்னிங்சில் விளையாடும்போது ஜெய்ஸ்வால் ஸ்டார்க் பந்தில் சிக்சர் விளாசுவார். பின்னர் ஸ்டார்க் வீசிய பந்தை ஸ்மார்ட்டாக தடுத்து ஆடுவார். பின்னர் உங்கள் பந்து மிகவும் வேகமாக வரவில்லை. ஸ்லோவாக உள்ளது என பதிலடி கொடுப்பார். இது மிகப்பெரிய விசயமாக பேசப்பட்டது.

    இந்த நிலையில் போட்டியின்போது ஜெய்ஸ்வால் என்னையும் ஸ்லெட்ஜ் செய்தார் என நாதன் லயன் தெரிவித்துள்ளார்.

    2-வது இன்னிங்சில் 120 ரன்கள் அடித்தபோது தசைப்பிடிப்பு காரணமாக பிசியோ பெற்றார். பின்னர் நான் பந்து வீசும்புாது என்னை நோக்கி நீங்கள் லெஜண்ட்தான். ஆனால் நீங்கள் வயதானவர் என ஜெய்ஸ்வால் என்னிடம் தெரிவித்தார் என நாதன் லயன் தெரிவித்துள்ளார்.

    டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் நாதன் லயன் 3-வது இடத்தில் உள்ளார். அவர் 130 போட்டிகளில் 532 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

    Next Story
    ×