என் மலர்
கிரிக்கெட் (Cricket)

பிரையன் பென்னெட் சதம்: முதல் ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே வெற்றி

- இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடந்தது.
- டாஸ் வென்ற அயர்லாந்து பவுலிங் தேர்வு செய்தது.
ஹராரே:
ஜிம்பாப்வே சென்றுள்ள அயர்லாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. டாஸ் வென்ற அயர்லாந்து பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 299 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் பிரையன் பென்னெட் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அவர் 169 ரன்னில் ஆட்டமிழந்தார். கேப்டன் கிரெய்க் எர்வின் 66 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து, 300 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் அயர்லாந்து அணி களமிறங்கியது. ஜிம்பாப்வே வீரர்கள் துல்லியமாகப் பந்து வீசியதால் சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன.
இறுதியில், அயர்லாந்து 46 ஓவரில் 250 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 49 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே வெற்றி பெற்றதுடன் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.