என் மலர்
கிரிக்கெட் (Cricket)
டிராவில் முடிந்த ஜிம்பாப்வே- ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டி: 4 சதம், 2 இரட்டை சதம்
- ஜிம்பாப்வே முதல் இன்னிங்சில் 586 ரன்கள் குவித்தது. 3 பேட்ஸ்மேன்கள் சதம்.
- ஆப்கானிஸ்தான் 699 ரன்கள் குவித்தது. 2 பேர் இரட்டை சதம், ஒரு பேட்ஸ்மேன் சதம்.
ஜிம்பாப்வே- ஆப்கானிஸ்தான் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜிம்பாப்வேயில் உள்ள புலவாயோவில் நடைபெற்றது.
டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் சீன் வில்லியம்ஸ் (154), கிரேக் எர்வின் (104), பிரியன் பென்னெட் (110 அவுட் இல்லை) ஆகியோர் சதம் அடிக்க முதல் இன்னிங்சில் 586 ரன்கள் குவித்தது.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆப்கானிஸ்தான் 699 ரன்கள் குவித்தது. ரஹ்மத் ஷா (234), ஹஸ்மதுல்லா ஷாஹிதி (246) இரட்டை சதமும், அஃப்சர் ஜஜாய் (113) சதமும் விளாசினார்.
113 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஐந்தாம் நாள் ஆட்டமான இன்று கடைசி நாளில் ஜிம்பாப்வே அணி 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்தது. அந்த அணி 4 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்திருக்கும்போது இரண்டு அணி கேப்டன்களும் போட்டியை முடித்துக் கொள்ள முடிவு செய்தனர். இதனால் போட்டி வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிந்தது.
2-வது மற்றும் 3-வது நாட்கள் ஆட்டத்தின்போது அவ்வப்போ மழை குறுக்கீடு செய்ததால் ஆட்டம் டிராவில் முடிந்தது. இல்லை என்றால் ஒருவேளை போட்டியில் முடிவு கிடைத்திருக்கலாம்.
இந்த ஆண்டு டிராவில் முடிவடைந்த 3-வது போட்டி இதுவாகும். இதற்கு முன் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான போட்டி டிராவில் முடிந்தது. இந்த போட்டியிலும் அவ்வப்போது மழை குறுக்கீடு செய்தது.
ஆகஸ்ட் மாதம் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ்- இங்கிலாந்து இடையிலான போட்டி டிராவில் முடிவடைந்தது. இந்த போட்டியிலும் மழை குறுக்கீடு ஏற்பட்டது. ஐந்து நாட்கள் முழுமையாக நடைபெற்று எந்த போட்டியும் டிராவில் முடியவில்லை.