search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    புரோ கபடி லீக்: ஜெய்ப்பூரை வீழ்த்தியது தபாங் டெல்லி
    X

    புரோ கபடி லீக்: ஜெய்ப்பூரை வீழ்த்தியது தபாங் டெல்லி

    • புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
    • இதில் டெல்லி அணி வென்று 12-வது வெற்றியைப் பதிவு செய்தது.

    புனே:

    11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடைபெற்றது.

    புரோ கபடி லீக்கின் மூன்றாம் கட்ட லீக் ஆட்டங்கள் மகாராஷ்டிராவின் புனே நகரில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், முதலில் நடந்த போட்டியில் தபாங் டெல்லி, ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதின.

    இதில் சிறப்பாக ஆடிய தபாங் டெல்லி அணி 33-31 என்ற புள்ளிக்கணக்கில் ஜெய்ப்பூர் அணியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.

    மற்றொரு ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் 40-40 என்ற புள்ளிக்கணக்கில் சமனில் முடிந்தது.

    Next Story
    ×