search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற கனவு ஒவ்வொரு வீரருக்கும் இருக்கும்- தரம்பிர்
    X

    ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற கனவு ஒவ்வொரு வீரருக்கும் இருக்கும்- தரம்பிர்

    • இந்தியா இதுவரை 25 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
    • இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.

    பிரான்ஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் உலகம் முழுவதில் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    பாரா ஒலிம்பிக் போட்டிகள் கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி துவங்கிய நிலையில், செப்டம்பர் 8 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

    இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.

    இதில் இந்தியா இதுவரை 25 பதக்கங்களை வென்றிருந்தது. இதில் 5 தங்கம், 9 வெள்ளி மற்றும் 11 வெண்கல பதக்கங்கள் அடங்கும்.

    பாரீஸ் ஆண்கள் கிளப் த்ரோ எஃப் 51 இல் பாரா ஒலிம்பிக்கில் தரம்பிர் தங்கம் வென்றார்.

    அவர் கூறுகையில்: - "நான் மிகவும் பெருமைப்படுகிறேன். ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற கனவு ஒவ்வொரு வீரருக்கும் இருக்கும். இன்று ஆசிரியர் தினம், அமித் சரோஹா இல்லாவிட்டால், நாங்கள் இங்கு இருந்திருக்க மாட்டோம், இந்தியாவிலும் இந்த விளையாட்டு இருந்திருக்காது என்பது உண்மைதான்..."


    Next Story
    ×