search icon
என் மலர்tooltip icon

    கால்பந்து

    ஐ.எஸ்.எல். கால்பந்து: ஒடிசாவை 4-2 என பந்தாடியது கோவா
    X

    ஐ.எஸ்.எல். கால்பந்து: ஒடிசாவை 4-2 என பந்தாடியது கோவா

    • முதல் பாதி நேர ஆட்டத்தில் கோவா 2-1 என முன்னிலை பெற்றது.
    • 2-வது பாதி நேர ஆட்டத்தில் ஓன் கோல் மூலம் ஒரு கோல் கிடைக்க 4-2 என வெற்றி பெற்றது.

    இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் இன்றைய முதலாவது ஆட்டத்தில் ஒடிசா- கோவா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆட்டம் தொடங்கிய 8-வது நிமிடத்தில் கோவா அணியின் பிரிசன் பெரனாண்டஸ் கோல் அடித்தார். அதற்கு பதிலாக ஒடிசா பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி 29-வது நிமிடத்தில் கோல் அடித்தது. இந்த கோலை அஹமது ஜஹோயுஹ் அடித்தார்.

    பின்னர் முதல் பாதி நேரம் முடிவடையும் நேரத்தில் (கூடுதல் நேரம் 45+2) கோவா அணியின் உதான்டா சிங் குமாம் கோல் அடிக்க முதல் பாதி நேரத்தில் கோவா 2-1 என முன்னிலைப் பெற்றது.

    பின்னர் 2-வது பாதி நேரத்தில் ஆட்டத்தின் 53-வது நிமிடத்தில் பிரிசன் பெர்னாண்டோஸ் மீண்டும் கோல் அடித்தார். அதன்பின் கோவா அணிக்கு ஓன் கோல் (அமேய் ரணாவாடே) மூலம் 56 நிமிடத்தில் கோல் கிடைக்க 4-1 என வலுவான முன்னிலைப் பெற்றது.

    ஆட்டம் முடிவடைவதற்கு முன்னதாக 88-வது நிமிடத்தில் ஒடிசா அணியின் ஜெர்ரி மாவிஹ்மிங்தங்கா கோல் அடித்தார். அதன்பின் இரு அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் கோவா 4-2 என வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் கோவா 13 ஆட்டங்கள் முடிவில் 25 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது. ஒடிசா 14 போட்டிகள் முடிவில் 20 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் உள்ளது.

    Next Story
    ×