என் மலர்
விளையாட்டு
X
துடுப்பு படகு போட்டியில் இந்திய வீரர் பால்ராஜ் பன்வார் அரையிறுதிக்கு முன்னேற்றம்
Byமாலை மலர்30 July 2024 5:15 PM IST (Updated: 30 July 2024 5:15 PM IST)
- 1000 மீட்டரை 3 நிமிடம் 29.34 வினாடியில் கடந்தார்.
- இலக்கை 7 நிமிடம் 5.10 வினாடியில் எட்டினார்.
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் துடுப்பு படகு போட்டியின் ஆண்களுக்கான ஒற்றையர் ஸ்கல்ஸ் பிரிவில் இந்தியாவின் பால்ராஜ் பன்வார் கலந்து கொண்டு விளையாடி வருகிறார்.
இன்று நடைபெற்ற காலிறுதியில் போட்டியில் 4-வது பிரிவில் இவருடன் மேலும் 6 பேர் கலந்து கொண்டனர். 2000 மீட்டர் தொலைவை துடுப்பு போட்டு கடக்க வேண்டும். பால்ராஜ் பன்வார் முதல் 500 மீட்டரை ஒரு நிமிடம் 42.28 வினாடியில் கடந்தார். 1000 மீட்டரை 3 நிமிடம் 29.34 வினாடியில் கடந்தார்.
1500 மீட்டர் தூரத்தை 5 நிமிடம் 17.22 வினாடிகளில் கடந்தார். 2000 மீட்டர் அதாவது இலக்கை 7 நிமிடம் 5.10 வினாடிகளில் எட்டினார். இதன்மூலம் காலிறுதி 4-ல் 5-வது இடம் பிடித்து அரையிறுதி (C/D) சுற்றுக்கு முன்னேறினார். நாளை அரையிறுதி போட்டி நடைபெறுகிறது.
Next Story
×
X