search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    ஸ்வப்னில் குசாலே வெண்கல பதக்கம் வென்றார்: இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 3 ஆக உயர்வு

    • ஸ்வப்னில் குசாலே 451.4 புள்ளிகளுடன் 3-வது இடம் பிடித்தார்.
    • சீன வீரர் முதல் இடமும், உக்ரைன் வீரர் 2-வது இடமும் பிடித்தனர்.

    ஆண்களுக்கான துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் 50 மீட்டர் ரைபிள் 3 நிலைகள் (50m Rifle 3 Positions) பிரிவின் இறுதிப் போட்டி இன்று மதியம் நடைபெற்றது. இறுதிப்போட்டிக்கு இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே உள்பட 8 வீரர்கள் தகுதி பெற்றனர்.

    இவர்களுக்கு இடையில் நடைபெற்ற இறுதி போட்டியில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே 3-வது இடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்றார். ஸ்வப்னில் குசாலே 451.4 புள்ளிகள் பெற்றார்.

    சீன வீரர் யுகுன் லியு 463.6 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கம் வென்றார். உக்ரைன் வீரர் செர்கிய் குலிஷ் 461.3 புள்ளிகள் பெற்று வெள்ளிப்பதக்கம் வென்றார்.

    இந்த பதக்கத்துடன் இந்தியா 3 வெண்கல பதக்கம் வென்றுள்ளது. இந்த மூன்று பதக்கங்களும் துப்பாக்கிச்சுடுதல் போட்டி மூலம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×