search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு (Sports)

    PV Sindhu
    X

    பேட்மிண்டனில் பிவி சிந்து அதிர்ச்சி தோல்வி - பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்

    • பிவி சிந்து சீன வீராங்கனை ஹி பிங் ஜியாவோவை எதிர்கொண்டார்.
    • ஜியாவோ அடுத்த போட்டியில் சென் யுபெய்-யை எதிர்கொள்கிறார்.

    பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், பேட்மிண்டன் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனை பிவி சிந்து சீன வீராங்கனை ஹி பிங் ஜியாவோவை எதிர்கொண்டு விளையாடினார்.

    இந்த போட்டியில், 21-19, 21-14 என்ற செட் கணக்கில், சிந்துவை வீழ்த்தி ஜியாவோ வெற்றி பெற்றார். இதற்கு முன் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கமும், ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கமும் வென்ற பிவி சிந்து இந்த முறை பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழக்கும் வகையில் வெளியேறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


    நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற சீன வீராங்கனை ஜியாவோ அடுத்த போட்டியில் மற்றொரு சீன வீராங்கனையான சென் யுபெய்-யை எதிர்கொண்டு விளையாட இருக்கிறார். இந்த போட்டி நாளை (ஆகஸ்ட் 3) நடைபெற இருக்கிறது.

    1992 ஆம் ஆண்டு பாரிசிலோனாவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் முதல்முறையாக பேட்மிண்டன் சேர்க்கப்பட்டது. அப்போது முதல் இந்தியா இதுவரை மூன்று பதக்கங்களை பேட்மிண்டனில் வென்றுள்ளது. இதில் பிவி சிந்து (ரியோ 2016-இல் வெள்ளி, டோக்கியோ 2020-இல் வெண்கலம்) மற்றும் சாய்னா நேவால் (லண்டன் 2012-இல் வெண்கலம்) வென்றுள்ளனர்.

    Next Story
    ×