என் மலர்
டென்னிஸ்
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது.
- இதன் 3-வது சுற்றில் நம்பர் 1 வீராங்கனை வெற்றி பெற்றார்.
நியூயார்க்:
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில், இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் 1 வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், ரஷிய வீராங்கனை பவுலியுசென்கோவா உடன் மோதினார்.
இதில் ஸ்வியாடெக் 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் கைப்பற்றி 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் 4-வது சுற்று ஆட்டத்தில் இகா ஸ்வியாடெக், ரஷியாவின் சாம்சனோவா உடன் மோத உள்ளார்.
மற்றொரு போட்டியில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி, கஜகஸ்தானின் யுலியா புடின்சேவாவை 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று 4வது சுற்றுக்கு முனனேறினார். நாளை நடைபெறும் 4-வது சுற்றில் பவுலினி செக் வீராங்கனை கரோலினா முச்சோவாவை சந்திக்கிறார்.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது.
- இதில் இந்தியாவின் ரோகன் போபண்ணா ஜோடி காலிறுதிக்கு முன்னேறியது.
நியூயார்க்:
நடப்பு ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-இந்தோனேசியாவின் அல்டிலா சுட்ஜியாடி ஜோடி,
ஆஸ்திரேலியாவின் ஜான் பீர்ஸ்-செக் வீராங்கனை கத்ரினா சினிகோவா ஜோடியுடன் மோதியது.
இதில் போபண்ணா ஜோடி 0-6, 7-6 (7-5), 10-7 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறியது.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது.
- இதன் 3-வது சுற்றில் காஸ்பர் ரூட் வெற்றி பெற்றார்.
நியூயார்க்:
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டத்தில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வரேவ், அர்ஜென்டினா வீரர் தாமஸ் எட்சவரி உடன் மோதினார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய ஸ்வரேவ் 5-7, 7-5, 6-1, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் நார்வே வீரர் காஸ்பர் ரூட், சீனாவின் ஷாங் ஜங்செங்கை 6-7 (1-7), 3-6, 6-0, 6-3, 6-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது.
- இதன் 3-வது சுற்றில் கோகோ காப் வெற்றி பெற்றார்.
நியூயார்க்:
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில், இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா, ரஷியாவின் எகடெரினா அலெக்ஸாண்ட்ரோவா உடன் மோதினார்.
இதில் சபலென்கா முதல் செட்டை 2-6 என்ற புள்ளிக்கணக்கில் இழந்தார். இதில் சுதாரித்துக் கொண்ட சபலென்கா அடுத்த இரு செட்களை 6-1, 6-2 என்ற செட் கணக்கில் கைப்பற்றினார்.
இறுதியில், சபலென்கா 2-6, 6-1, 6-2 என்ற செட் கணக்கில் வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் 4-வது சுற்று ஆட்டத்தில் அரினா சபலென்கா, பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டென்ஸ் உடன் மோத உள்ளார்.
மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் கோகோ காப், உக்ரைனின் எலினா ஸ்விடோலினாவை 3-6, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் வென்று 4வது சுற்றுக்கு முனனேறினார். நாளை நடைபெறும் 4வது சுற்றில் கோகோ காப், சக வீராங்கனை எம்மா நவாரோவை சந்திக்கிறார்.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது.
- இதில் இந்தியாவின் ரோகன் போபண்ணா ஜோடி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
நியூயார்க்:
நடப்பு ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போண்ணா-ஆஸ்திரேலியாவின் எப்டன் ஜோடி, ஸ்பெயினின் ராபர்ட் கார்பெலஸ்-அர்ஜென்டினாவின் பெடரிகோ கோரியா ஜோடியுடன் மோதியது.
இதில் போபண்ணா ஜோடி 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.
இதேபோல் கலப்பு இரட்டைய பிரிவி இந்தியாவின் ரோகன் போபண்ணா-இந்தோனேசியாவின் அல்டிலா சுட்ஜியாடி ஜோடி, நெதர்லாந்தின் டெமி சர்ஸ்-ஜெர்மன் வீரர் டிம் புட்ஸ் ஜோடியுடன் மோதியது.
இதில் போபண்ணா ஜோடி 7-6 (9-7), 7-6 (7-5) என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.
- முதல் இரண்டு செட்டுகளை இழந்த ஜோகோவிச், அதன் அதிர்ச்சியில் இருந்து மீண்டு வர முடிவில்லை.
- 3-வது செட்டை 6-2 எனக் கைப்பற்றினாலும் 4-வது செட்டை 6-4 இழந்தார்.
கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. 3-வது சுற்றில் 2-ம் நிலை வீரரான செர்பியாவின் ஜோகோவிச், 28-ம் நிலை வீரரான ஆஸ்திரேலியாவின் அலேக்சி பாபிரின்-ஐ எதிர்கொண்டார்.
இந்த போட்டியில் ஜோகோவிச் எளிதாக வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜோகோவிச்சிற்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் 25 வயதான அலேக்சி பாபிரின் முதல் செட்டை 6-4, 2-வது செட்டை 6-4 எனக் கைப்பற்றி ஷாக் அளித்தார்.
ஆனால் 3-வது செட்டில் ஜோகோவிச் சிறப்பான விளையாடி 6-2 இந்த செட்டை கைப்பற்றினார். இதனால் அனுபவ வீரரான ஜோகோவிச் அடுத்த இரண்டு செட்டுகளையும் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் 4-வது செட்டை 4-6 என இழக்க, 6-4, 6-4, 2-6, 6-4 என தோல்வியடைந்து அதிர்ச்சிகரமாக அமெரிக்க ஓபனில் இருந்து வெளியேறினார்.
ஏற்கனவே அல்காரஸ் 2-வது சுற்றில் தரநிலை பெறாத வீரரிடம் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.
2 மற்றும் 3-ம் நிலை வீரர்களான ஜோகோவி் மற்றும் அல்காரஸ் காலிறுதிக்கு கூட முன்னேறாமல் வெளியேறியது டென்னிஸ் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
- போட்டியில் அணிந்திருந்த ஆடையால் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளார்.
- கால் சட்டையை சுற்றிலும் அலங்கரிப்பு வேலைகள் செய்யப்பட்டு இருந்தன.
இரண்டு ஆண்டுகள் கழித்து நவாமி ஒசாகா அமெரிக்க ஓபன் தொடரில் களமிறங்கினார். ஜெலனா ஒஸ்டாபென்கோவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற நவாமி இந்த போட்டியில் அணிந்திருந்த ஆடையால் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளார்.
நியான் கிரீன் நிற ஆடை அணிந்து களத்திற்குள் என்ட்ரி கொடுத்த நவாமி போட்டி துவங்குவதற்கு முன்பே அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். வழக்கமான டென்னிஸ் ஆடையை சற்று மறு வடிவமைப்பு செய்த நவோமா, ஜாக்கெட்-ஐ அலங்கரித்து அணிந்திருந்தார். இத்துடன் கால் சட்டையை சுற்றிலும் அலங்கரிப்பு வேலைகள் செய்யப்பட்டு இருந்தன.
இவர் அணிந்திருந்த ஆடையை பின்புறம் இருந்து பார்த்தால் பட்டாம்பூச்சி போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் அளவுக்கு ஜாக்கெட்டில் நீண்ட டை இணைக்கப்பட்டு இருந்தது. இதே போல் கால் சட்டையில் சிறு சிறு மடிப்புகள் கூடுதலாக இணைக்கப்பட்டு இருந்தன. தனது ஆடை போட்டியில் எந்த இடையூறும் ஏற்படுத்தாத வகையில் பார்த்துக் கொண்ட நவாமி வெற்றி வாகை சூடினார்.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது.
- இதன் 2வது சுற்றில் நம்பர் 1 வீராங்கனை வெற்றி பெற்றார்.
நியூயார்க்:
ஒவ்வொரு ஆண்டும் 4 வகையான கிராண்ட் ஸ்லாம் போட்டிகள் பிரபலமானவை. அதில் ஒன்று யு.எஸ். ஓபன் தொடராகும். இந்த ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், ஜப்பான் வீராங்கனை எனா ஷிபாஹரா உடன் மோதினார்.
இதில் ஸ்வியாடெக் 6-0, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, சக வீராங்கனை சோபியா கெனினை 7-6 (7-4), 6-3 என்ற செட் கணக்கில் வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
- அல்காரஸ் மற்றும் வான் டி சாண்ட்சுல்ப் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினார்.
- இதில் முதல் செட்டை (6-1) என்ற கணக்கில் எளிதாக வான் டி சாண்ட்சுல்ப் கைப்பற்றினார்.
நியூயார்க்:
கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த 2-ம் சுற்று ஆட்டம் ஒன்றில் 3-ம் நிலை வீரரான ஸ்பெயினின் அல்காரஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
தர வரிசையில் 74-வது இடத்தில் இருக்கும் நெதர்லாந்தின் வான்டி சான்ட்ஸ்சுல்பிடம் 6-1, 7-5, 6-4 என்ற நேர்செட் கணக்கில் அல்காரஸ் தோற்று வெளியேறினார்.
4 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள முன்னணி வீரரான அல்காரஸ், 2022-ம் ஆண்டு அமெரிக்க ஓபனை வென்றிருந்தார். கடந்த ஆண்டு நடந்த அமெரிக்க ஓபனில் அரை இறுதியில் தோற்று இருந்தார். இந்த ஆண்டு 2-வது சுற்றிலேயே நடையை கட்டினார்.
மற்றொரு 2-ம் சுற்று ஆட்டம் ஒன்றில் 5-ம் நிலை வீரரான ரஷியாவின் மெட்வதேவ்-ஹங்கேரியின் மரோசன் ஆகியோர் மோதினர்.
இதில் மெட்வதேவ் 6-3, 6-2, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
அதேபோல் டாமிபால் (அமெரிக்கா), டான் எவர்ஸ் (இங்கிலாந்து), மென்ஷிக் (செக் குடியரசு) ஆகியோர் தங்களது ஆட்டங்களில் வென்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2-ம் சுற்று ஆட்டம் ஒன்றில் வோஸ்னியாக்கி (டென்மார்க்) 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் மெக்சிகோவின் ஜராசுவாலை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
4-ம் நிலை வீராங்கனையான கஜகஸ்தானின் ரைபகினா காயம் காரணமாக 2-வது சுற்றில் இருந்து விலகினார்.
ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போண்ணா-எப்டன் (ஆஸ்திரேலியா) ஜோடி 6-3, 7-5 என்ற செட் கணக்கில் டென்மார்க்கின் ராபின் ஹாஸ்-சாண்டர் அரேண்ட்ஸ் ஜோடியை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறியது.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடந்து வருகிறது.
- இதில் ஸ்ரீராம் பாலாஜி ஜோடி முதல் சுற்றில் போராடி வென்றது.
நியூயார்க்:
நடப்பு ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் நடந்த முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி, அர்ஜென்டினாவின் கிடோ ஆன்ட்ரியோஸ் ஜோடி, நியூசிலாந்தின் மார்கஸ் டேனியல், மெக்சிகோவின் ரேயஸ் வரெலா ஜோடியுடன் மோதியது.
இதில் ஸ்ரீராம் பாலாஜி ஜோடி 5-7, 6-1, 7-6 (12-10) என்ற செட்களில் போராடி வென்றதுடன், அடுத்த சுற்றுக்கும் முன்னேறியது.
ஏற்கனவே யூகி பாம்ப்ரி ஜோடி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஜோகோவிச் (செர்பியா) 2-வது சுற்றில் சக நாட்டைச் சேர்ந்த லாஸ்லோ டிஜெரேவை சந்தித்தார்.
- டிஜெரே காயத்தால் விலகியதால் ஜோகோவிச் வெற்றிபெற்றார்.
நியூயார்க்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் உலகின் 2-ம் நிலை வீராங்கனையான ஷபலென்கா (பெலாரஸ்) லூசியா புரோன்ட்டியை (இத்தாலி) சந்தித்தார். இதில் ஷபலென்கா 6-3, 6-1 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த சுற்றில் அவர் ரஷிய வீராங்கனை அலெக் சாண்ட்ரோவுடன் மோதுகிறார்.
3-வது வரிசையில் இருக்கும் கோகோ கவூப் (அமெரிக்கா) தட்ஜனா மரியாவை (ஜெர்மனி) எதிர் கொண்டார். இதில் கவூப் 6-4, 6-0 என்ற நேர் செட் கணக்கில் வென்றார். மற்ற 2-வது சுற்று ஆட்டங்களில் 14-வது வரிசையில் உள்ள மேடிசன் கெய்ஸ் (அமெ ரிக்கா) செங் (சீனா) படோசா (ஸ்பெயின்), விக்டோரியா அசரென்கா (பெலாரஸ்) ஆகியோர் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
நடப்பு சாம்பியனும், உலகின் இரண்டாம் நிலை வீரருமான ஜோகோவிச் (செர்பியா) 2-வது சுற்றில் சக நாட்டைச் சேர்ந்த லாஸ்லோ டிஜெரேவை சந்தித்தார்.
முதல் 2 செட்டை ஜோகோவிச் 6-4, 6-4 என்ற கணக்கில் வென்றார். 3-வது செட்டில் அவர் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த போது டிஜெரே காயத்தால் விலகினார். இதனால் ஜோகோவிச் வெற்றிபெற்றார்.
மற்ற ஆட்டங்களில் 4-வது வரிசையில் இருக்கும் அலெக்சாண்டர் சுவரேவ் (ஜெர்மனி), பிரிட்ஸ்டி, யாபோ, ஷெல்டன் (அமெரிக்கா), ரூப்லெவ் (ரஷியா), கேஸ்பர்ரூட் (நார்வே) முசெட்டி (இத் தாலி) ஆகியோர் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடந்து வருகிறது.
- இதில் யூகி பாம்ப்ரி ஜோடி முதல் சுற்றில் வெற்றி பெற்றது.
நியூயார்க்:
நடப்பு ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இன்று நடந்த முதல் சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, பிரான்சின் அல்போனோ ஒலிவெட்டி ஜோடி, அமெரிக்காவின் ரியான் செக்கர்மேன்-பாட்ரிக் தாக் ஜோடியுடன் மோதியது.
இதில் யூகி பாம்ப்ரி ஜோடி 6-3, 6-4 என்ற நேர் செட்களில் அமெரிக்க ஜோடியை வென்றதுடன், அடுத்த சுற்றுக்கும் முன்னேறியது.