search icon
என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    • ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் ஸ்பெயின் வீரர் அல்காரஸ் வெற்றி பெற்றார்.
    • ஆண்கள் இரட்டையர் பிரிவிலும் அல்காரஸ் ஜோடி வென்று காலிறுதிக்கு முன்னேறியது.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    இந்நிலையில், டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் ஜோகோவிச், ஜெர்மனியின் கோப்பெர் உடன் மோதினார்.

    இதில் ஜோகோவிச் 7-5, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், ரஷிய வீரர் ரோமன் சபியுலினுடன் மோதினார். இதில் அல்காரஸ் 6-4, 6-2 என்ற நேர் செட்களில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    இதேபோல, ஆண்கள் இரட்டையர் பிரிவிலும் அல்காரஸ் ஜோடி வென்று காலிறுதிக்கு முன்னேறியது.

    • 2-வது சுற்று ஆட்டத்தில் ரபேல் நடால் (ஸ்பெயின்) நோவக் ஜோகோவிச்சை (செர்பியா) எதிர்கொண்டார்.
    • களிமண் தரையில் நடக்கும் போட்டி என்பதால் நடாலின் ஆதிக்கத்தை ஜோகோவிச் முறியடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்தது.

    பாரீஸ்:

    பாரீஸ் ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டத்தில் ரபெல் நடால் (ஸ்பெயின்) 24 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரான நோவக் ஜோகோவிச்சை (செர்பியா) எதிர்கொண்டார்.

    இது களிமண் தரையில் நடக்கும் போட்டி என்பதால் நடாலின் ஆதிக்கத்தை ஜோகோவிச் முறியடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்தது.

    ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் நடாலை 6-1, 6-4 என்ற கணக்கில் எளிதாக வீழ்த்தி 3-வது சுற்றுக்கு ஜோகோவிச் முன்னேறினார். 

    • முதல் செட்டை இழந்த சுமித் நாகல், 2-வது செட்டை 6-2 என்ற கணக்கில் வீழ்த்தினார்.
    • பரபரப்பாக சென்ற 3-வது செட்டை மௌடெட் 7-5 என்ற கணக்கில் வீழ்த்தினார்.

    பாரீஸ் 2024 ஒலிம்பிக்கின் இன்று ஆண்களுக்கான டென்னிஸ் போட்டி நடைபெற்றது. இதன் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சுமித் நாகல்- பிரெஞ்சு வீரரான கொரெண்டின் மௌடெட் உடன் மோதினார்.

    முதல் செட்டை இழந்த சுமித் நாகல், 2-வது செட்டை 6-2 என்ற கணக்கில் வீழ்த்தினார். யாரு வெற்றி பெறுவார் என்ற நிலையில் 3-வது சுற்று நடைபெற்றது. பரபரப்பாக சென்ற 3-வது செட்டை மௌடெட் 7-5 என்ற கணக்கில் வீழ்த்தினார்.

    இதனால் 6-2, 2-6, 7-5 என்ற செட் கணக்கில் சுமித் நாகலை மௌடெட் வீழ்த்தினார். இந்த ஆட்டம் இரண்டு மணி நேரம் 28 நிமிடங்களில் நடைபெற்றது. 

    • குரோசியா ஓபன் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிச்சுற்று நடந்தது.
    • இதில் இத்தாலி வீரர் முசெட்டி அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    ஜாக்ரெப்:

    குரோசியா ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிச்சுற்று நேற்று நடந்தது.

    இதில் இத்தாலில் வீரர் முசெட்டி, அர்ஜெண்டினாவின் பிரான்சிஸ்கோ செரண்டலோவை சந்தித்தார்.

    இந்தப் போட்டியின் முடிவில் பிரான்சிஸ்கோ 2-6, 6-4, 7-6 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    • குரோசியா ஓபன் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அரையிறுதி சுற்று நடந்தது.
    • இதில் இத்தாலி வீரர் முசெட்டி வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    ஜாக்ரெப்:

    குரோசியா ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்றுகள் நேற்று நடந்தன.

    இதில் இத்தாலி வீரர் லாரன்சோ முசெட்டி, செக் வீரர் ஜாகுப் மென்சிக்குடன் மோதினார்.

    இந்தப் போட்டியின் முடிவில் முசெட்டி 6-4, 6-1 என்ற நேர் செட்கணக்கில் வெற்றி பெற்று இறுதிக்கு முன்னேறினார்.

    இறுதிப்போட்டியில் முசெட்டி, அர்ஜெண்டினாவின் பிரான்சிஸ்கோ செரண்டலோவை சந்திக்கிறார்.

    • குரோசியா ஓபன் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அரையிறுதி சுற்று நடந்தது.
    • ரஷிய வீரர் ரூப்லெவ் அரையிறுதியில் தோல்வி அடைந்தார்.

    ஜாக்ரெப்:

    குரோசியா ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்றுகள் நேற்று நடந்தன.

    இதில் ரஷிய வீரர் ரூப்லெவ், அர்ஜெண்டினாவின் பிரான்சிஸ்கோ செரண்டலோவை சந்தித்தார்.

    இந்தப் போட்டியின் முடிவில் ரூப்லெவ் 6-7 (6-8), 4-6 என்ற செட்கணக்கில் தோல்வி அடைந்து போட்டியில் இருந்து வெளியேறினார்.

    இதில் வெற்றி பெற்ற பிரான்சிஸ்கோ, இன்று இரவு நடைபெறும் இறுதிப்போட்டியில் இத்தாலி வீரர் முசெட்டியை சந்திக்கிறார்.

    • குரோசியா ஓபன் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி சுற்று நடந்தது.
    • இதில் இத்தாலி வீரர் முசெட்டி வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    ஜாக்ரெப்:

    குரோசியா ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றுகள் நேற்று நடைபெற்றன.

    இதில் இத்தாலி வீரர் லாரன்சோ முசெட்டி, செர்பிய வீரர் டுசன் லஜோவிக் உடன் மோதினார்.

    இந்தப் போட்டியின் முடிவில் முசெட்டி 5-7, 6-3, 6-0 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    அரையிறுதியில் முசெட்டி, செக் வீரர் ஜாகுப் மென்சிக்கை சந்திக்கிறார்.

    மற்றொரு போட்டியில் ரஷிய வீரர் ரூப்லெவ், ஹங்கேரி வீரர் பேபியன் மரோஜானை சந்தித்தார்.

    இந்தப் போட்டியின் முடிவில் ரூப்லெவ் 5-7, 6-3, 6-2 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    அரையிறுதியில் ரூப்லெவ், அர்ஜெண்டினாவின் பிரான்சிஸ்கோவை சந்திக்கிறார்.

    • ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்க ஓபன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
    • 2016-ல் நடந்த ஒலிம்பிக் போட்டியில் கெர்பர் வெள்ளிப் பதக்கம் வென்றவர்.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நாளை ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக தொடங்குகிறது.

    இந்நிலையில், ஜெர்மனியைச் சேர்ந்த வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்குப் டென்னிசில் இருந்து ஓய்வு பெற உள்ளேன் என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக, கெர்பர் வெளியிட்டுள்ள செய்தியில், பாரீஸ் 2024-ஐ ஒருபோதும் மறக்கமாட்டேன். ஏனென்றால் இது ஒரு டென்னிஸ் வீரராக எனது கடைசி தொழில்முறை போட்டியாக இருக்கும்.

    இது உண்மையில் சரியான முடிவு. விளையாட்டை முழு மனதுடன் நேசிப்பதாலும், அது எனக்கு வழங்கிய நினைவுகள் மற்றும் வாய்ப்புகளுக்காகவும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். மக்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். எனது கடைசி போட்டியை முடித்தவுடன் அதைச் செய்வேன் என தெரிவித்துள்ளார்.

    ஆஸ்திரேலியா ஓபன் மற்றும் அமெரிக்க ஓபன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள இவர், தரவரிசையில் முதல் இடமும் பிடித்துள்ளார்.

    ஏஞ்சலிக் கெர்பர் 2016-ல் நடந்த ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • குரோசியா ஓபன் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்று நடந்தது.
    • இதில் இத்தாலி வீரர் முசெட்டி வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    ஜாக்ரெப்:

    குரோசியா ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு சுற்று நேற்று நடைபெற்றது.

    இதில் இத்தாலி வீரர் லாரன்சோ முசெட்டி, அர்ஜெண்டினாவின் மார்கோ உடன் மோதினார்.

    இந்தப் போட்டியின் முடிவில் முசெட்டி 6-4, 6-3 என்ற நேர் செட்கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் காலிறுதியில் முசெட்டி, செர்பிய வீரர் டுசன் லஜோவிக்கை சந்திக்கிறார்.

    • குரோசியா ஓபன் தொடரில் ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதி சுற்று நடந்தது.
    • இதில் யூகி பாம்ப்ரி-அல்பானோ ஜோடி தோல்வி அடைந்தது.

    ஜாக்ரெப்:

    குரோசியா ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது. ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதி சுற்று இன்று நடைபெற்றது.

    இதில் நம்பர்-3 அந்தஸ்து பெற்ற இந்தியாவின் யூகி பாம்ப்ரி, பிரான்சின் அல்பானோ ஜோடி, பிரான்சின் மானுவல் கினார்டு-கிரிகோரி ஜாக் ஜோடியைச் சந்தித்தது.

    முதல் செட்டை பிரான்ஸ் ஜோடி 6-4 என கைப்பற்றியது. இதற்கு பதிலடியாக யூகி பாம்ப்ரி ஜோடி 6-1 என எளிதில் கைப்பற்றியது.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை பிரான்ஸ் ஜோடி 10-6 என கைப்பற்றி, அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது. இந்த தோல்வியின் மூலம் யூகி பாம்ப்ரி ஜோடி குரோசியா ஓபன் தொடரில் இருந்து வெளியேறியது.

    • குரோசியா ஓபன் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு சுற்று நடைபெற்றது.
    • இதில் ரஷிய வீரர் ரூப்லெவ் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    ஜாக்ரெப்:

    குரோசியா ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு சுற்று நேற்று நடைபெற்றது. இதில் ரஷிய வீரர் ஆண்ட்ரே ரூப்லெவ், அர்ஜெண்டினாவின் கேமிலோ யூகோ உடன் மோதினார்.

    இந்தப் போட்டியின் முடிவில் ரூப்லெவ் 6-4, 7-5 என்ற நேர் செட்கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் காலிறுதியில் ரூப்லெவ், ஹங்கேரி வீரர் பேபியன் மரோஜானை சந்திக்கிறார்.

    • குரோசியா ஓபன் தொடரில் ஆண்கள் இரட்டையர் பிரிவு 2வது சுற்று நடைபெற்றது.
    • இதில் யூகி பாம்ப்ரி ஜோடி வென்று காலிறுதிக்கு முன்னேறியது.

    ஜாக்ரெப்:

    குரோசியா ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது. ஆண்கள் இரட்டையர் பிரிவு 2வது சுற்று நேற்று நடைபெற்றது.

    இதில் நம்பர்-3 அந்தஸ்து பெற்ற இந்தியாவின் யூகி பாம்ப்ரி, பிரான்சின் அல்பானோ ஜோடி, ஸ்லோவோகியாவின் ஜோஸ் கோவாலிக், அர்ஜெண்டினாவின் கேமிலோ யூகோ ஜோடியைச் சந்தித்தது.

    இந்தப் போட்டியின் முடிவில் பாம்ப்ரி ஜோடி 6-3, 6-2 என்ற நேர் செட்கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

    ×