search icon
என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    • இன்று ந்டந்த அரையிறுதி போட்டிகளில் சபலென்கா, கோகோ காப் வென்றனர்.
    • பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் அரினா சபலென்கா, கோகோ காப் மோதுகின்றனர்.

    நியூயார்க்:

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

    இதில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் பெலாரசின் அரினா சபலென்கா, அமெரிக்காவின் மேடிசன் கீஸை எதிர்கொண்டார்

    இதில் 0-6 என முதல் செட்டை இழந்த சபலென்கா, அடுத்த இரு செட்களில் 7-6, 7-6 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    இதேபோல், மற்றொரு அரையிறுதியில், அமெரிக்காவின் கோகா காப், கரோலினா முச்சோவாவை எதிர்கொண்டார்.

    இதில் தொடக்கம் முதலே அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கோகா காப் 6-4, 7-5 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் அரினா சபலென்கா, கோகோ காப் மோதுகின்றனர்.

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.
    • ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதியில் இந்தியாவின் போபண்ணா ஜோடி வென்றது.

    நியூயார்க்:

    கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் நடந்தது.

    இதில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டென் ஜோடி, பிரான்சின் நிகோலஸ் மஹத், பியர்-ஹியுஸ் ஹெர்பெர்ட் ஜோடியுடன் மோதியது.

    இதில் போபண்ணா ஜோடி 7-6 (7-3), 6-2 என்ற நேர்செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    13 ஆண்டுகளுக்குப் பிறகு ரோகன் போபண்ணா அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கார்லோஸ் அல்காரஸ் கால்இறுதியில் அலெக்சாண்டர் சுவரேவை எதிர் கொண்டார்.
    • அல்காரஸ் அரைஇறுதியில் மெட்வதேவை 9-ந் தேதி சந்தித்தார்.

    நியூயார்க்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. உலகின் முதல் நிலை வீரரும், நடப்பு சாம்பியனுமான கார்லோஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) கால்இறுதியில் ஜெர்மனியை சேர்ந்த 12-வது வரிசையில் இருக்கும் அலெக்சாண்டர் சுவரேவை எதிர் கொண்டார். இதில் அல்காரஸ் 6-3, 6-2 6-4 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.


    இந்நிலையில் காலிறுதியில் அல்காரஸ் மற்றும் அலெக்சாண்டர் சுவரேவ் மோதிய ஆட்டத்தை இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சிஎஸ்கே அணியின் கேப்டனுமான எம்எஸ் டோனி கண்டு களித்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    அல்காரஸ் அரைஇறுதியில் மெட்வதேவை 9-ந் தேதி சந்தித்தார். 

    • அல்காரஸ் 6-3, 6-2 6-4 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.
    • இந்த வெற்றியை பெற அவருக்கு 2 மணி 30 நிமிட நேரம் தேவைப்பட்டது.

    நியூயார்க்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

    உலகின் முதல் நிலை வீரரும், நடப்பு சாம்பியனுமான கார்லோஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) கால்இறுதியில் ஜெர்மனியை சேர்ந்த 12-வது வரிசையில் இருக்கும் அலெக்சாண்டர் சுவரேவை எதிர் கொண்டார்.

    இதில் அல்காரஸ் 6-3, 6-2 6-4 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார். இந்த வெற்றியை பெற அவருக்கு 2 மணி 30 நிமிட நேரம் தேவைப்பட்டது.

    அல்காரஸ் அரைஇறுதியில் மெட்வதேவை சந்திக்கிறார். 3-வது வரிசையில் இருக்கும் டேனில் மெட்வதேவ் (ரஷியா) கால்இறுதி ஆட்டத்தில் 6-4, 6-3, 6-4 என்ற கணக்கில் சக நாட்டைச் சேர்ந்த 8-ம் நிலை வீரரான ஆந்த்ரே ரூப்லெவை வீழ்த்தினார்.

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடந்து வருகிறது
    • இதில் ரஷியாவின் மெத்வதேவ் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    நியூயார்க்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

    ரஷியாவின் டேனில் மெத்வதேவ், சக வீரர் ஆன்ட்ரூ ரூப்லெவுடன் மோதினார். இதில் மெத்வதேவ் 6-4, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.

    இதேபோல் பெண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

    இதில் பெலாரசின் அரினா சபலென்கா, சீனாவின் குயின்வென் செங் உடன் மோதினார். இதில் சபலென்கா 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    • 35, 45 மற்றும் 55 வயதுக்கு மேற்பட்டோர் என 3 பிரிவுகளில் போட்டி நடக்கிறது.
    • முதல் முறையாக பெண்களும் இந்தப் போட்டியில் பங்கேற்கிறார்கள்.

    சென்னை:

    பிரசிடென்சி கிளப் சார்பில் சர்வதேச மூத்தோர் (வெடன்ஸ்) ஐ.டி.எப். டென் னிஸ் போட்டி சென்னையில் வருகிற 11-ந்தேதி தொடங்கு கிறது. 16-ந்தேதி வரை பிரசி டென்சி கிளப் மற்றும் எஸ்.டி.ஏ.டி. டென்னிஸ் ஸ்டேடி யம் ஆகிய இடங்களில் நடக்கிறது.

    35, 45 மற்றும் 55 வயதுக்கு மேற்பட்டோர் என 3 பிரிவுகளில் போட்டி நடக்கிறது. ஒற்றையர், இரட்டையர் பிரிவில் நடைபெறுகிறது. இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வீரர்கள் பங்கேற்கி றார்கள். இதுவரை 90-க் கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர். முதல் முறையாக பெண்களும் இந்தப் போட்டியில் பங்கேற்கிறார்கள்.

    சர்வதேச டென்னிஸ் சங்கம், அகில இந்திய டென்னிஸ் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் நடத்தும் இந்தப் போட்டியின் மொத்த பரிசு தொகை ரூ.2.10 லட்சமாகும்.

    மேற்கண்ட தகவலை போட்டி அமைப்பு குழு தலைவர் கே.சிவராம் செல் வக்குமார் போட்டி இயக்குனர் ஹிட்டன ஜோஷி, செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் தெரிவித்தனர்.

    • பென் ஷெல்டன் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் முதன் முறையாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
    • கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் 3 முறையாக கரோலினா முச்சோவா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

    நியூயார்க்:

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் அமெரிக்காவின் பென் ஷெல்டன் சக நாட்டு வீரரான பிரான்சிஸ் தியாபோவை எதிர்கொண்டார்.

    இந்த ஆட்டத்தில் 6-2, 3-6, 7-6, 6-2 என்ற செட் கணக்கில் பென் ஷெல்டன், பிரான்சிஸ் தியாபோவை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதன் மூலம் இவர் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் முதன் முறையாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.

    அரையிறுதி சுற்றில் பென் ஷெல்டன் செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை எதிர் கொள்கிறார்.

    இதேபோல பெண்கள் ஒற்றையர் பிரிவில் சொரானா சிர்ஸ்டியா - கரோலினா முச்சோவா மோதின. இந்த ஆட்டத்தில் 6-0, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    இதன் மூலம் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் 3 முறையாக இவர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். அமெரிக்க ஓபனில் முதன் முறையாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.
    • ஆண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதி சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் போபண்ணா ஜோடி வென்றது.

    நியூயார்க்:

    கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் நடந்தது.

    இதில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டென் ஜோடி, அமெரிக்காவின் லேமன்ஸ், வித்ரோ ஜோடியுடன் மோதியது.

    இதில் போபண்ணா ஜோடி 7-6 (12-10), 6-1 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது
    • இதில் செர்பியாவின் ஜோகோவிச் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    நியூயார்க்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

    செர்பியாவின் ஜோகோவிச், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்சுடன் மோதினார். இதில் ஜோகோவிச் 6-1, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.

    இதேபோல் பெண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

    இதில் அமெரிக்காவின் கோகோ காப், லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டாபென்கோ உடன் மோதினார். இதில் கோகோ காப் 6-0, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    • ரஷ்யாவின் டாரியா கசட்கினாவை வீழ்த்தி சபலென்கா காலிறுதிக்கு முன்னேறினார்.
    • சபலெங்கா காலிறுதியில் சீனாவின் கின்வென் ஜெங்கை எதிர்கொள்கிறார்.

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. இந்நிலையில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் உலகின் நம்பர்-1 வீராங்கனையான அரினா சபலென்கா 6-1, 6-3 என்ற செட் கணக்கில் ரஷ்யாவின் டாரியா கசட்கினாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

    சபலென்கா காலிறுதியில் சீனாவின் கின்வென் ஜெங்கை எதிர்கொள்கிறார். இந்த ஆட்டம் நாளை நடைபெறுகிறது.

    • இந்த ஆட்டம் 4 மணி நேரம் 41 நிமிடம் நடந்தது.
    • காலிறுதியில் அலெக்சாண்டர் நம்பர் ஒன் வீரரான அல்காரஸை எதிர் கொள்கிறார்.

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் மற்றும் ஜனிக் சின்னர் ஆகியோர் மோதினர். இதில் ஸ்வெரெவ் முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் வீழ்த்தினார். 2-வது செட்டை சின்னர் 6-3 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

    இதனையடுத்து நடந்த 3 செட்டை அலெக்சாண்டர் 6-2 என்ற கணக்கிலும் 4-வது செட்டை சின்னர் 6-4 என்ற கணக்கிலும் கைப்பற்றினர். வெற்றியை நிர்ணயிக்கும் கடைசி செட்டை அலெக்சாண்டர் 6-3 என்ற கணக்கில் வீழ்த்தினார்.

    இதன்மூலம் 6-3, 3-6, 6-2, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் அலெக்சாண்டர் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றார். இந்த ஆட்டம் 4 மணி நேரம் 41 நிமிடம் நடந்தது. இந்த ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.

    காலிறுதியில் அலெக்சாண்டர் நம்பர் ஒன் வீரரான அல்காரஸை எதிர் கொள்கிறார்.

    • மெட்வதேவ் கால்இறுதியில் 8-வது வரிசையில் இருக்கும் சக நாட்டை சேர்ந்த ஆந்த்ரே ரூப்லெவை சந்திக்கிறார்.
    • பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஷபலென்கா 4-வது சுற்று ஆட்டத்தில் டாரியா கசட்கினாவை வென்று கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.

    நியூயார்க்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

    உலகின் முதல் நிலை வீரரும், நடப்பு சாம்பியனான அல்காரஸ் (ஸ்பெயின்) 4-வது சுற்றில் மேட்டோ அர்னால்டியை (இத்தாலி) எதிர் கொண்டார்.

    இதில் அல்காரஸ் 6-3, 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று கால்இறுதிக்கு தகுதி பெற்றார். இந்த வெற்றியை பெற அவருக்கு 1 மணி 57 நிமிட நேரம் மட்டுமே தேவைப்பட்டது.

    3-ம் நிலை வீரரான டேனில் மெட்வதேவ் (ரஷியா) 4-வது சுற்று ஆட்டத்தில் 2-6, 6-4, 6-1, 6-2 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த 13-வது வரிசையில் உள்ள அலெக்ஸ் டி மினாவூரை தோற்கடித்தார்.

    மெட்வதேவ் கால்இறுதியில் 8-வது வரிசையில் இருக்கும் சக நாட்டை சேர்ந்த ஆந்த்ரே ரூப்லெவை சந்திக்கிறார். அவர் 4-வது சுற்று ஆட்டத்தில் 6-3. 3-6. 6-3. 6-4 என்ற கணக்கில் இங்கிலாந்து வீரர் டிராப்பரை வீழ்த்தினார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2-ம் நிலை வீராங்கனையான ஷபலென்கா (பெலாரஸ்) 4-வது சுற்று ஆட்டத்தில் ரஷியாவை சேர்ந்த டாரியா கசட்கினாவை 6-1, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வென்று கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.

    அவர் கால் இறுதியில் சீனாவை சேர்ந்த செங்கை சந்திக்கிறார். செங் 4-வது சுற்றில் 5-வது வரிசையில் உள்ள ஜபேரை (துனிசியா), 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் அதிர்ச்சிகரமாக வீழ்த்தினார்.

    இதேபோல 3-வது வரிசையில் உள்ள ஜெசிகா பெகுலாவும் (அமெரிக்கா) அதிர்ச்சிகரமாக தோற்று வெளியேறினார். மற்றொரு அமெரிக்க வீராங்கனையான மேடிசன் கெய்ஸ் 6-1, 6-3 என்ற நேர் செட் கணக்கில் பெகுலாவை வீழ்த்தினார்.

    இன்னொரு ஆட்டத்தில் வான்ட்ரோ சோவா (செக் குடியரசு) 6-7 (3-7), 6-3, 6-2 என்ற செட் கணக்கில் பைடன் ஸ்டென்சை (அமெரிக்கா), தோற்கடித்தார். வான்ட்ரோ சோவா கால்இறுதியில் சேடிசன் கெய்சை எதிர்கொள்கிறார்.

    ×