search icon
என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    • பயண கலைப்பு, தூக்கமின்மை பிரச்சினைக்காக எடுத்த மருந்தால் தான் இந்த சிக்கல் ஏற்பட்டு விட்டது.
    • தனக்கு விதிக்கப்பட ஒரு மாத தடையை முறைப்படி ஏற்றுக்கொள்வதாக ஸ்வியாடெக் கூறினார்.

    லண்டன்:

    பெண்கள் டென்னிஸ் தரவரிசையில் 2-வது இடம் வகிப்பவரும், 5 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான இகா ஸ்வியாடெக்கிடம் (போலந்து) கடந்த ஆகஸ்டு மாதம், போட்டியில் பங்கேற்காத சமயத்தில் நடத்தப்பட்ட ஊக்க மருந்து பரிசோதனையில் அவர் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியது கண்டறியப்பட்டது.

    இதனையடுத்து அவர் ஒரு மாதம் இடைநீக்கம் செய்யப்பட்டார். அத்துடன் அவருக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. பிறகு அப்பீல் செய்ததால் இடைநீக்கம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

    தனக்கு விதிக்கப்பட ஒரு மாத தடையை முறைப்படி ஏற்றுக்கொள்வதாக 23 வயதான ஸ்வியாடெக் தற்போது அறிவித்த பிறகே அவர் ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிய தகவல் அனைவருக்கும் தெரிந்துள்ளது. 'இது தெரியாமல் நடந்த தவறு, பயண கலைப்பு, தூக்கமின்மை பிரச்சினைக்காக எடுத்த மெலடோனின் மருந்தால் தான் இந்த சிக்கல் ஏற்பட்டு விட்டது' என ஸ்வியாடெக் அளித்த விளக்கத்தை விசாரணை கமிட்டியினர் ஏற்றுக்கொண்டதால் குறைந்த தண்டனையுடன் தப்பித்தார். வருகிற 4-ந்தேதிக்கு பிறகு அவர் போட்டிகளில் பங்கேற்கலாம்.

    • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெறுகிறது.
    • ஆண்டி முர்ரே சமீபத்தில் நடந்து முடிந்த பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு ஓய்வு பெற்றார்.

    நான்கு வகை கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெற உள்ளது.

    இந்நிலையில், ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் செர்பிய வீரரும், நம்பர் 2 வீரருமான நோவக் ஜோகோவிச் இங்கிலாந்தின் ஆண்டி முர்ரேவை புதிய பயிற்சியாளராக அறிவித்தார்.

    அனுபவம் வாய்ந்த டென்னிஸ் வீரரான ஆண்டி முர்ரே சமீபத்தில் நடந்து முடிந்த பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு ஓய்வு பெற்றார்.

    ஜனவரி மாதம் மெல்போர்னில் நடைபெறும் ஆஸ்திரேலிய ஓபனில் ஜோகோவிச்சுடன் இணைந்து பணியாற்ற உள்ளார்.

    இதுதொடர்பாக ஜோகோவிச் கூறுகையில், எனது மிகப்பெரிய போட்டியாளர்களில் ஒருவரை, வலையின் அதே பக்கத்தில், இந்த முறை எனது பயிற்சியாளராக இருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என தெரிவித்தார்.

    • ரபேல் நடால் 22 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார்.
    • பிரெஞ்ச் ஓபனில் மட்டும் 14 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

    டென்னிஸ் போட்டியில் தலைசிறந்த வீரராக திகழ்ந்தவர் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ரபேல் நடால். இடது கை பழக்கம் கொண்ட நடால் புல் தரையை விட களிமண் தரையில் கிங்காக விளங்கியவர். களிமண் தரையில் நடைபெறும் பிரெஞ்ச் கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டத்தை 14 முறை வென்றுள்ளார். மொத்தம் 22 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார்.

    38 வயதாகும் ரபேல் நடால் தற்போது நடைபெற்று வரும் டேவிஸ் கோப்பையுடன் விடைபெறுவதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில் டேவிஸ் கோப்பை காலிறுதியில் ஸ்பெயின்- நெதர்லாந்து அணிகள் மோதின. நடல் நெதர்லாந்தை சேர்ந்த போட்டிக் வான் டி சாண்ட்ஸ்கல்ப்-ஐ எதிர்கொண்டார்.

    இதில் 4-6, 4-6 என நடால் தோல்வியடைந்தார். இதனால் தோல்வியுடன் அவருடைய 23 வருட டென்னிஸ் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. சொந்த மண்ணில் (மலாகா) கூடியிருந்த ரசிகர்களின் மத்தியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத் முயற்சி செய்த நடாலுக்கு தோல்வி ஏற்பட்டது.

    கடந்த 2004-ம் ஆண்டு ஒரு போட்டியில் தோல்வியடைந்த பிறகு 29 போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று வெற்றி சராசரியில் சாதனைப்படைத்துள்ளார்.

    தொழில்முறை டென்னிஸ் இருந்து ஓய்வு பெற இருப்பதாக கடந்த மாதம் அறிவித்திருந்தார். காயம் அவரை இந்த முடிவை எடுக்க வழிவகுத்தது.

    டேவிஸ் கோப்பையின் முதல் போட்டியில் தோல்வியடைந்திருந்தேன். தற்போது கடைசி போட்டியில் தோல்வியடைந்துள்ளேன். ஆகவே, நாங்கள் வட்டத்தை முடித்துள்ளோம். என நடால் நகைச்சுவையாக தெரிவித்தார்.

    ஜோகோவிச் 24 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று முதல் இடத்தை பிடித்துள்ளார். நடால் 22 பட்டங்களுடன் 2-வது இடத்தில் உள்ளார்.

    • ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியில் நடைபெற்றது.
    • இதில் நம்பர் 1 வீரரான ஜானிக் சின்னர் கோப்பை வென்றார்.

    பெல்கிரேட்:

    ஏ.டி.பி. இறுதிச்சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் கடந்த 10ம் தேதி தொடங்கியது. இந்தப் போட்டி இன்றுடன் முடிவடைகிறது.

    இந்தப் போட்டியில் ஒற்றையரில் தரவரிசையில் முதல் 8 இடத்தில் உள்ள வீரர்களும், இரட்டையர் பிரிவில் டாப்-8 ஜோடியினரும் பங்கேற்றனர்.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் உடன் மோதினார்.

    இதில் சின்னர் 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    • ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியில் நடைபெறுகிறது.
    • இதில் நம்பர் 2 வீரரான ஸ்வரேவ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    பெல்கிரேட்:

    ஏ.டி.பி. இறுதிச்சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் கடந்த 10ம் தேதி தொடங்கியது. இந்தப் போட்டி நாளையுடன் முடிவடைகிறது.

    இந்தப் போட்டியில் ஒற்றையரில் தரவரிசையில் முதல் 8 இடத்தில் உள்ள வீரர்களும், இரட்டையர் பிரிவில் டாப்-8 ஜோடியினரும் பங்கேற்றனர்.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் நம்பர் 2 வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் உடன் மோதினார்.

    இதில் பிரிட்ஸ் 6-3, 3-6, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் பிரிட்ஸ், சின்னர் அல்லது ரூட் இவர்களில் ஒருவருடன் மோத உள்ளார்.

    • ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியில் நடைபெறுகிறது.
    • இதில் நம்பர் 6 வீரரான காஸ்பர் ரூட் 3வது சுற்றில் வெற்றி பெற்றார்.

    பெல்கிரேட்:

    ஏ.டி.பி. இறுதிச்சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் கடந்த 10ம் தேதி தொடங்கியது. இந்தப் போட்டி 17-ம் தேதி வரை நடக்கிறது.

    இந்தப் போட்டியில் ஒற்றையரில் தரவரிசையில் முதல் 8 இடத்தில் உள்ள வீரர்களும், இரட்டையர் பிரிவில் டாப்-8 ஜோடியினரும் கலந்து கொள்கிறார்கள்.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 3வது லீக் போட்டியில் 6-வது நிலை வீரரான நார்வேயின் காஸ்பர் ரூட், 8வது நிலை வீரரான ரஷியாவின் ஆண்ட்ரூ ரூப்லெவ் உடன் மோதினார்.

    இதில் காஸ்பர் ரூட் 6-4, 5-7, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

    • ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியில் நடைபெறுகிறது.
    • இதில் நம்பர் 2 வீரரான ஸ்வரேவ் 3வது சுற்றில் வெற்றி பெற்றார்.

    பெல்கிரேட்:

    ஏ.டி.பி. இறுதிச்சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் கடந்த 10ம் தேதி தொடங்கியது. இந்தப் போட்டி நாளை மறுதினம் வரை நடக்கிறது.

    இந்தப் போட்டியில் ஒற்றையரில் தரவரிசையில் முதல் 8 இடத்தில் உள்ள வீரர்களும், இரட்டையர் பிரிவில் டாப்-8 ஜோடியினரும் கலந்து கொனடனர்.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 3வது லீக் போட்டியில் நம்பர் 2 வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், நம்பர் 3 வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் உடன் மோதினார்.

    இதில் ஸ்வரேவ் 7-6 (7-5), 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.

    நாளை நடைபெறும் அரையிறுதியில் ஸ்வரேவ், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்சுடன் மோதுகிறார்.

    • ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியில் நடைபெறுகிறது.
    • இதில் நம்பர் 1 வீரரான சின்னர் 3வது சுற்றில் வெற்றி பெற்றார்.

    பெல்கிரேட்:

    ஏ.டி.பி. இறுதிச்சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் கடந்த 10ம் தேதி தொடங்கியது. இந்தப் போட்டி 17-ம் தேதி வரை நடக்கிறது.

    இந்தப் போட்டியில் ஒற்றையரில் தரவரிசையில் முதல் 8 இடத்தில் உள்ள வீரர்களும், இரட்டையர் பிரிவில் டாப்-8 ஜோடியினரும் கலந்து கொள்கிறார்கள்.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 3வது லீக் போட்டியில் நம்பர் 1 வீரரான இத்தாலியின் சின்னர், நம்பர் 4 வீரரான ரஷியாவின் டேனில் மெத்வதேவ் உடன் மோதினார்.

    இதில் சின்னர் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதன்மூலம் சின்னர் அரையிறுதிக்குள் நுழைந்தார்.

    • ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியில் நடைபெறுகிறது.
    • இதில் நம்பர் 2 வீரரான ஸ்வரேவ் 2வது சுற்றில் வெற்றி பெற்றார்.

    பெல்கிரேட்:

    ஏ.டி.பி. இறுதிச்சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் கடந்த 10ம் தேதி தொடங்கியது. இந்தப் போட்டி 17-ம் தேதி வரை நடக்கிறது.

    இந்தப் போட்டியில் ஒற்றையரில் தரவரிசையில் முதல் 8 இடத்தில் உள்ள வீரர்களும், இரட்டையர் பிரிவில் டாப்-8 ஜோடியினரும் கலந்து கொள்கிறார்கள்.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2வது லீக் போட்டியில் 2ம் நிலை வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், 6-வது நிலை வீரரான நார்வேயின் காஸ்பர் ரூட் உடன் மோதினார்.

    இதில் ஸ்வரேவ்7-6 (7-3), 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

    மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் 5-7, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாரை வென்றார்.

    • ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியில் நடைபெறுகிறது.
    • இதில் நம்பர் 3 வீரரான அல்காரஸ் 2வது சுற்றில் வெற்றி பெற்றார்.

    பெல்கிரேட்:

    ஏ.டி.பி. இறுதிச்சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் கடந்த 10ம் தேதி தொடங்கியது. இந்தப் போட்டி 17-ம் தேதி வரை நடக்கிறது.

    இந்தப் போட்டியில் ஒற்றையரில் தரவரிசையில் முதல் 8 இடத்தில் உள்ள வீரர்களும், இரட்டையர் பிரிவில் டாப்-8 ஜோடியினரும் கலந்து கொள்கிறார்கள்.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2வது லீக் போட்டியில் 3ம் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், 8-வது நிலை வீரரான ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ் உடன் மோதினார்.

    இதில் அல்காரஸ் 6-3, 7-6 (10-8) என்ற செட் கணக்கில் அபார வெற்றி பெற்றார்.

    மற்றொரு போட்டியில் இத்தாலியின் சின்னர் அமெரிக்காவின் டெய்லர் பிரிட்சை 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வென்றார்.

    • ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியில் நடைபெறுகிறது.
    • இதில் நம்பர் 4 வீரரான மெத்வதேவ் 2வது சுற்றில் வெற்றி பெற்றார்.

    பெல்கிரேட்:

    ஏ.டி.பி. இறுதிச்சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடந்து வருகிறது. இந்தப் போட்டி 17-ம் தேதி வரை நடக்கிறது.

    இந்த போட்டியில் ஒற்றையரில் தரவரிசையில் முதல் 8 இடத்தில் உள்ள வீரர்களும், இரட்டையர் பிரிவில் டாப்-8 ஜோடியினரும் கலந்து கொள்கிறார்கள்.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த போட்டியில் 4ம் நிலை வீரரான ரஷியாவின் மெத்வதேவ், 7-வது நிலை வீரரான ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாருடன் மோதினார்.

    இதில் மெத்வதேவ் 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வென்றார்.

    • வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் வெளியிட்டது.
    • இதில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா முதலிடத்தை தக்கவைத்துள்ளார்.

    நியூயார்க்:

    டாப்-8 வீராங்கனைகள் பங்கேற்ற மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் ரியாத்தில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் அமெரிக்காவின் கோகோ காப் கோப்பை வென்று அசத்தினார்.

    இந்நிலையில், டென்னிஸ் வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது.

    இதன் ஒற்றையர் தரவரிசையில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா (9,416 புள்ளி) முதலிடத்தை தக்கவைத்துள்ளார்.

    கடந்த 2 மாதங்களாக சபலென்கா மிகச்சிறப்பாக விளையாடி வருகிறார். அமெரிக்க ஓபன், வுஹான் ஓபன் ஆகிய போட்டிகளில் மகுடம் சூடினார். தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துவதால் அவருக்கு 'நம்பர் ஒன்' இடம் கிடைத்துள்ளது.

    போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் (8,370 புள்ளி) இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார்.

    அமெரிக்காவின் கோகோ காப் 3-வது இடத்திலும் (6,530 புள்ளி), இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி 4-வது இடத்திலும் (5,344), சீன வீராங்கனை ஹுயின்வென் ஜெங் 5வது இடத்திலும் (5,340) உள்ளனர்.

    ×