search icon
என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    • ஆரஞ்சு பிரிவில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் கோகோ காப்- இகா ஸ்வியாடெக் மோதினர்.
    • இதில் வெற்றி பெற்ற கோகோ காப் அரைஇறுதியை எட்டினார்.

    ரியாத்:

    உலகின் முன்னணி 8 வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்றுள்ள டபிள்யூ.டி.ஏ. இறுதி சுற்று எனப்படும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சவுதிஅரேபியா தலைநகர் ரியாத்தில் நடந்து வருகிறது. இதில் ஆரஞ்சு பிரிவில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் அமெரிக்க 'இளம் புயல்' கோகோ காப் 6-4, 6-4 என்ற நேர் செட்டில் 2-ம் நிலை வீராங்கனையான நடப்பு சாம்பியன் இகா ஸ்வியாடெக்கை (போலந்து) தோற்கடித்தார். 2-வது வெற்றியை சுவைத்த கோகோ காப் அரைஇறுதியை எட்டினார்.

    மற்றொரு ஆட்டத்தில் விம்பிள்டன் சாம்பியனான பார்போரா கிரெஜ்சிகோவா (செக்குடியரசு) 6-3, 6-3 என்ற நேர் செட்டில் ஜெசிகா பெகுலாவை (அமெரிக்கா) வெளியேற்றி, அரைஇறுதி வாய்ப்பை தக்க வைத்தார்.

    • பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி ரியாத்தில் நடந்து வருகிறது.
    • இதில் அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலா தோல்வி அடைந்தார்.

    ரியாத்:

    உலகின் டாப்-8 முன்னணி வீராங்கனைகள் மட்டும் பங்கேற்கும் டபிள்யூ.டி.ஏ. இறுதிச்சுற்று எனப்படும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் நடைபெற்று வருகிறது.

    ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனையான ஜெசிகா பெகுலா, செக் வீராங்கனை பார்பரா கிரெஜ்சிகோவா உடன் மோதினார்.

    இதில் கிரெஜ்சிகோவா 6-3, 6-3 என்ற செட் கணக்கில் வென்றார். இதில் அமெரிக்க வீராங்கனை பெகுலா அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    • ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியில் நடைபெற உள்ளது.
    • இதில் நம்பர் 2 வீரரான ஜோகோவிச் திடீரென விலகினார்.

    பெல்கிரேட்:

    ஏ.டி.பி. இறுதிசுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் வரும் 10-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை நடக்கிறது.

    இந்த போட்டியில் ஒற்றையரில் தரவரிசையில் முதல் 8 இடத்தில் உள்ள வீரர்களும், இரட்டையர் பிரிவில் டாப்-8 ஜோடியினரும் கலந்து கொள்கிறார்கள்.

    இந்த போட்டிக்கு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டென் ஜோடி தகுதி பெற்றுள்ளது.

    இந்நிலையில், இந்தத் தொடரில் பங்கேற்கப் போவதில்லை என செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.

    அதில், காயம் காரணமாக இந்த தொடரில் பங்கேற்க முடியவில்லை. இதனால் ரசிகர்களிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

    கடந்த ஆண்டு நடந்த போட்டியில் ஜோகோவிச், நம்பர் 1 வீரரான சின்னரை தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் நடந்து வருகிறது.
    • சபலென்கா 6-3, 7-5 என்ற நேர் செட்டில் ஜாஸ்மின் பாவ்லினியை வீழ்த்தினார்.

    ரியாத்:

    உலகின் டாப்-8 வீராங்கனைகள் மட்டும் பங்கேற்றுள்ள டபிள்யூ.டி.ஏ. இறுதி சுற்று எனப்படும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் நடந்து வருகிறது.

    இதில் 'பர்பிள்' பிரிவில் நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் ஒலிம்பிக் சாம்பியனும், உலக தரவரிசையில் 7-வது இடம் வகிப்பவருமான ஜாங் கின்வென்(சீனா) 7-6 (7-4), 3-6, 6-1 என்ற செட் கணக்கில் போராடி எலினா ரைபகினாவை (கஜகஸ்தான்) வீழ்த்தினார்.

    2-வது ஆட்டத்தில் ஆடிய கின்வென் பெற்ற முதல் வெற்றி இதுவாகும். தொடர்ந்து 2-வது தோல்வியை சந்தித்த ரைபகினா அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தார்.

    இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் நம்பர் ஒன் வீராங்கனை அரினா சபலென்கா (பெலாரஸ்) 6-3, 7-5 என்ற நேர் செட்டில் ஜாஸ்மின் பாவ்லினியை (இத்தாலி) வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றதுடன், அரைஇறுதி சுற்றையும் உறுதி செய்தார்.

    • பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பாரீசில் நடந்து வருகிறது.
    • இதில் நம்பர் 3 வீரர் ஸ்வரேவ் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    பாரீஸ்:

    பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டங்கள் நடைபெற்றது.

    இந்நிலையில், இன்று நடந்த இறுதிப்போட்டியில் நம்பர் 3 வீரரும் ஜெர்மனியைச் சேர்ந்த அலெக்சாண்டர் ஸ்வரேவ், பிரான்சின் யூகோ ஹம்பர்ட் உடன் மோதினார்.

    இதில் ஸ்வரேவ் 6-2, 6-2 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    • பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி ரியாத்தில் நடந்து வருகிறது.
    • இதில் நம்பர் 2 வீராங்கனை இகா ஸ்வியாடெக் வெற்றி பெற்றார்.

    ரியாத்:

    உலகின் டாப்-8 முன்னணி வீராங்கனைகள் மட்டும் பங்கேற்கும் டபிள்யூ.டி.ஏ. இறுதிச்சுற்று எனப்படும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் நடைபெற்று வருகிறது.

    ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த ஆட்டத்தில் நம்பர் 2 வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், செக் வீராங்கனை பார்பரா கிரெஜ்சிகோவா உடன் மோதினார்.

    இதில் ஸ்வியாடெக் 4-6, 7-5, 6-2 என்ற செட் கணக்கில் வென்றார்.

    நாளை மறுதினம் நடைபெற போட்டியில் அமெரிக்க வீராங்கனைகள் கோகோ காப் மற்றும் ஜெசிகா பெகுலாவுடன் மோத உள்ளார்.

    • பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி ரியாத்தில் நடந்து வருகிறது.
    • இதில் முன்னணி வீராங்கனையான ரிபாகினா அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    ரியாத்:

    உலகின் டாப்-8 முன்னணி வீராங்கனைகள் மட்டும் பங்கேற்கும் டபிள்யூ.டி.ஏ. இறுதிச்சுற்று எனப்படும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் நடைபெற்று வருகிறது.

    ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த ஆட்டத்தில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி உடன் மோதினார்.

    இதில் எலினா ரிபாகினா 6-7 (5-7), 4-6 என்ற செட் கணக்கில் ஜாஸ்மின் பவுலினியிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    முன்னதாக, போட்டி தொடங்கும் முன் பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான நெய்மார் டாஸ் போட்டு ஆட்டத்தை தொடங்கி வைத்தார்.

    முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக நெய்மார் கடந்த ஒரு ஆண்டாக போட்டிகளில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது.
    • இதில் பிரான்ஸ் வீரர் யூகோ ஹம்ர்பர்ட் இறுதிக்கு முன்னேறினார்.

    பாரீஸ்:

    பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், நேற்று நடந்த அரையிறுதி சுற்றில் பிரான்சின் யூகோ ஹம்பர்ட், ரஷிய வீரர் கரன் கச்சனாவ் உடன் மோதினார்.

    இதில் ஹம்பர்ட் 6- 7 (6-8), 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    இன்று இரவு நடைபெறும் இறுதிப்போட்டியில் ஹம்ப்ர்ட், ஸ்வரேவுடன் மோதுகிறார்.

    • பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பாரீசில் நடந்து வருகிறது.
    • இதில் நம்பர் 3 வீரர் ஸ்வரேவ் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    பாரீஸ்:

    பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், இன்று நடந்த முதல் அரையிறுதிச் சுற்றில் நம்பர் 3 வீரரும் ஜெர்மனியைச் சேர்ந்த அலெக்சாண்டர் ஸ்வரேவ், டென்மார்க்கின் ஹோல்ஜர் ரூனே உடன் மோதினார்.

    இதில் ஸ்வரேவ் 6-3, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    • பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது.
    • இதில் நம்பர் 3 வீரர் ஸ்வரேவ் அரையிறுதிக்கு முன்னேறினார்.

    பாரீஸ்:

    பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், நேற்று நடந்த காலிறுதி சுற்றில் நம்பர் 3 வீரரும் ஜெர்மனியைச் சேர்ந்த அலெக்சாண்டர் ஸ்வரேவ், கிரீஸ் வீரர் சிட்சிபாசுடன் மோதினார்.

    இதில் ஸ்வரேவ் 7-5, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் ரஷிய வீரர் கரன் கச்சனாவ், பல்கேரியாவின் கிரிகோர் டிமித்ரோவை 6-2, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

    • பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது.
    • இதில் போபண்ணா ஜோடி அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

    பாரீஸ்:

    பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா- ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹெப்டன் ஜோடி, குரோசியாவின் நிகோலா மெக்டிக்- நெதர்லாந்தின் வெஸ்லி கூலுப் ஜோடியுடன் மோதியது.

    இதில் போபண்ணா ஜோடி 6-7 (13-15), 5-7 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தது. இதன்மூலம் தொடரில் இருந்தும் வெளியேறியது.

    கடந்த அக்டோபரில் நடந்த வியன்னா ஓபன் டென்னிஸ் தொடரிலும் போபண்ணா ஜோடி காலிறுதியில் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

    • பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது.
    • இதில் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் வெற்றி பெற்றார்.

    பாரீஸ்:

    பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், நேற்று நடந்த 2வது சுற்றில் நம்பர் 3 வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், பிரான்ஸ் வீரர் ஆர்தர் பில்ஸ் உடன் மோதினார்.

    இதில் ஸ்வரேவ் 6-4, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் அர்ஜெண்டினாவின் பிரான்சிஸ்கோவை 6-7 (1-7), 6-4, 6-2 என வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

    இன்று நடக்கும் காலிறுதியில் சிட்சிபாஸ், ஸ்வரேவ் உடன் மோதுகிறார்.

    ×