search icon
என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    • பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது.
    • இதில் நம்பர் 2 வீரரான அல்காரஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    பாரீஸ்:

    பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், நேற்று நடந்த 2வது சுற்றில் நம்பர் 2 வீரரும் ஸ்பெயினைச் சேர்ந்த கார்லோஸ் அல்காரஸ், பிரான்ஸ் வீரரான யூகோ ஹம்பர்ட் உடன் மோதினார்.

    இதில் ஹம்பர்ட் 6-1, 3-6, 7-5 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    இந்த தோல்வியின் மூலம் நம்பர் 2 வீரரான கார்லோஸ் அல்காரஸ் பாரீஸ் மாஸ்டர்ஸ் தொடரில் இருந்து வெளியேறினார்.

    • 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் டேனில் மெத்வதேவ், அலெக்சி போபிரின்னை எதிர்கொண்டார்.
    • இந்த ஆட்டத்தில் இதில் அலேக்சி போபிரின் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    பாரீஸ்:

    பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று (ரவுண்ட் ஆப் 32) ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான ரஷியாவின் டேனில் மெத்வதேவ், ஆஸ்திரேலியாவின் அலெக்சி போபிரின்னை எதிர்கொண்டார்.

    பரபரப்பான இந்த ஆட்டத்தில் இதில் அலேக்சி போபிரின் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் 6-4, 2-6 , 7 (7), 6 (4 ) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார் . இதனால் மெத்வதேவ் தொடரில் இருந்து வெளியேறினார்

    • மெத்வதேவ் முதல் செட்டை 4-6 என இழந்தார்.
    • 2-வது செட்டை 6-2 என எளிதாக கைப்பற்றினார்.

    பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 2-வது சுற்றில் 4-ம் தரநிலை வீரரான ரஷியாவின் டேனில் மெத்வதேவ், ஆஸ்திரேலியாவின் அலெக்சி போபிரின்னை எதிர்கொண்டார்.

    இதில் அலேக்சி போபிரின் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தனது சர்வீஸ் மூலம் மெத்வதேவ்-ஐ திணறடித்தார். இதனால் முதல் செட்டை அலேக்சி போபிரின் 6-4 என எளிதாக கைப்பற்றினார்.

    ஆனால் 2-வது சுற்றில் சுதாரித்துக் கொண்ட டேனில் மெட்வதேவ் 6-2 என எளிதாக கைப்பற்றினார். இதனால் வெற்றியை தீர்மானிக்கும் 3-வது செட்டில் இருவரும் மல்லுக்கட்டினர்.

    ஒரு கட்டத்தில் மெட்வதேவ் 4-1 என பின்தங்கினார். பின்னர் சிறப்பாக விளையாடி கேம்-ஐ கைப்பற்ற, இந்த செட் டை-பிரேக்கர் வரை சென்றது. டை-பிரேக்கரில் 7-4 என அலேக்சி போபிரின் கைப்பற்றினார். இதனால் மெத்வதேவ் 4-6, 6-2, 6 (4)-7 (7) என தோல்வியடைந்தார்.

    • பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது.
    • போபண்ணா- எப்டன் இணை காலிறுதிக்கு முன்னேறியது.

    பாரீஸ்:

    பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவின் ரவுண்ட் ஆப் 16 சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா - ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் இணை, பிரேசிலின் மார்செலோ மெலோ - ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் இணையுடன் மோதியது.

    இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே அபாரமாக செயல்பட்ட போபண்ணா- எப்டன் இணை 6-4, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் பிரேசிலின் மார்செலோ மெலோ - ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் இணையை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

    • பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது.
    • இதில் நம்பர் 6 வீரரான ரூப்லெவ் முதல் சுற்றில் தோல்வி அடைந்தார்.

    பாரீஸ்:

    பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், இன்று நடந்த முதல் சுற்றில் ரஷியாவின் ஆண்ட்ரூ ரூப்லெவ், அர்ஜெண்டினாவின் பிரான்சிஸ்கோ உடன் மோதினார்.

    இதில் ரூப்லெவ் 6-7 (6-8), 6-7 (5-7) என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்த்உ, தொடரில் இருந்து வெளியேறினார்.

    இதேபோல், மற்றொரு போட்டியில் இத்தாலியின் மேட்டியோ பெரேட்டினி ஆஸ்திரேலியாவின் அலெக்சி பாப்ரின் உடன் மோதினார்.

    இதில் பெரேட்டினி 5-7, 6-7 (2-7) என்ற செட் கணக்கில் தோலவி அடைந்தார்.

    • பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது.
    • இதில் நம்பர் ஒன் வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர் திடீரென விலகினார்.

    பாரீஸ்:

    பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், பாரீஸ் மாஸ்டர்ஸ் தொடரில் இருந்து நம்பர் ஒன் வீரரான இத்தாலியைச் சேர்ந்த ஜானிக் சின்னர் திடீரென விலகியுள்ளார். வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதால் போட்டியில் இருந்து விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

    ஏற்கனவே, பாரீஸ் மாஸ்டர்ஸ் தொடரில் பங்கேற்கப் போவதில்லை என நோவக் ஜோகோவிச் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடந்தது.
    • இதில் ரஷிய வீரர் கரன் கச்சனாவ் தோல்வி அடைந்தார்.

    வியன்னா:

    வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடைபெற்றது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றுப் போட்டி நேற்று நடைபெற்றது.

    பிரிட்டனின் ஜாக் டிராபர், ரஷியாவின் கரன் கச்சனாவ் உடன் மோதினார்.

    இதில் ஜாக் டிராபர் 6-4, 7-5 என்ற செட் கணக்கில் வென்று கோப்பையை வென்றார்.

    • ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் ஜப்பானில் நடைபெற்றது.
    • இதில் அமெரிக்க வீராங்கனை சோபியா கெனின் தோல்வி அடைந்தார்.

    டோக்கியோ:

    ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் ஜப்பானில் நடைபெற்றது. இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் அமெரிக்காவின் சோபியா கெனின், சீன வீராங்கனை குயின்வென் ஜெங் உடன் மோதினார்.

    இதில் குயின்வென் ஜெங் 7-6 (7-5), 6-3 என்ற நேர் செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார்.

    ஏற்கனவே இவர் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடந்து வருகிறது.
    • இதில் இத்தாலி வீரர் முசெட்டி அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    வியன்னா:

    வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன.

    இதில் இத்தாலியின் லாரன்சோ முசெட்டி, பிரிட்டனின் ஜாக் டிராபர் உடன் மோதினார். இதில் முசெட்டி 2-6, 4-6 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    மற்றொரு போட்டியில் ரஷியாவின் கரன் கச்சனாவ், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் உடன் மோதினார். இதில் கரன் கச்சனாவ் 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    இன்று நடைபெறும் இறுதிச்சுற்றில் கரன் கச்சனாவ், பிரிட்டனின் ஜாக் டிராபர் உடன் மோதுகிறார்.

    • ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் ஜப்பானில் நடைபெற்று வருகிறது.
    • இதில் அமெரிக்க வீராங்கனை சோபியா கெனின் வென்றார்.

    டோக்கியோ:

    ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் ஜப்பானில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் அமெரிக்காவின் சோபியா கெனின், பிரிட்டிஷ் வீராங்கனை கேடி போல்டர் உடன் மோதினார்.

    இதில் சோபியா கெனின் 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு அரையிறுதியில் சீனாவின் குயின்வென் ஜெங், ரஷியாவின் டயானா ஷ்னெய்டரை 7-6 (7-5), 6-3 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் சோபியா கெனின், சீன வீராங்கனையை எதிர்கொள்கிறார்

    • வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடந்து வருகிறது.
    • இதில் ஜெர்மனி வீரர் ஸ்வரேவ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    வியன்னா:

    வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன.

    இதில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வரேவ், இத்தாலியின் லாரன்சோ முசெட்டி உடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை 6-2 என வென்ற ஸ்வரேவ், அடுத்த இரு செட்களை 6-7 (5-7), 4-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.

    மற்றொரு போட்டியில் ரஷியாவின் கரன் கச்சனாவ், இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினியை 6-1, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    இன்று நடைபெறும் அரையிறுதி சுற்றில் இத்தாலியின் முசெட்டி, பிரிட்டனின் ஜாக் டிராபர் உடன் மோதுகிறார்.

    • ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் ஜப்பானில் நடைபெற்று வருகிறது.
    • இதில் அமெரிக்க வீராங்கனை சோபியா கெனின் வெற்றி பெற்றார்.

    டோக்கியோ:

    ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் ஜப்பானில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் அமெரிக்காவின் சோபியா கெனின், ரஷியாவின் டேரியா கசட்கினா உடன் மோதினார்.

    இதில் சோபியா கெனின் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இவர் அரையிறுதியில் பிரிட்டிஷ் வீராங்கனை கேடி போல்டர் உடன் மோதுகிறார்.

    மற்றொரு காலிறுதியில் சீனாவின் குயின்வென் ஜெங், கனடா வீராங்கனை லேலா பெர்னாண்டசை 6-0, 1-6, 6-3 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    ×