என் மலர்
டென்னிஸ்

X
இந்தியன் வெல்ஸ் ஓபன்: அரையிறுதியில் மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி
By
மாலை மலர்16 March 2025 4:09 AM IST

- இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
- இதன் அரையிறுதி சுற்றில் ரஷியாவின் மெத்வதேவ் தோல்வி அடைந்தார்.
வாஷிங்டன்:
இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அரையிறுதி சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.
இன்று நடந்த முதல் அரையிறுதியில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், டென்மார்க் வீரர் ஹோல்ஜர் ரூனே உடன் மோதினார்.
இதில் ஆரம்பம் முதலே ஹோல்ஜர் ரூனே அதிரடியாக ஆடினார். இதனால் முதல் செட்டை 7-5 என கைப்பற்றினார். 2வது செட்டை ரூனே 6-4 என கைப்பற்றி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இதன்மூலம் மெத்வதேவ் தொடரில் இருந்து வெளியேறினார்.
Next Story
×
X