என் மலர்
டென்னிஸ்

X
இந்தியன் வெல்ஸ் ஓபன்: மெத்வதேவ், ரூனே அரையிறுதிக்கு முன்னேற்றம்
By
மாலை மலர்14 March 2025 5:11 AM IST

- இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
- இதன் காலிறுதி சுற்றில் ரஷியாவின் மெத்வதேவ் வெற்றி பெற்றார்.
வாஷிங்டன்:
இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.
இன்று நடந்த போட்டியில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், பிரான்சின் ஆர்தர் பில்ஸ் உடன் மோதினார்.
இதில் முதல் செட்டில் மெத்வதேவ் 6-4 என வென்றார். 2வது செட்டை ஆர்தர் பில்ஸ் 6-2 என கைப்பற்றினார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை மெத்வதேவ் 7-6 (9-7) வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் டென்மார்க் வீரர் ஹோல்ஜர் ரூனே நெதர்லாந்தின் கிரீக்ஸ்பூரை 5-7, 6-0, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
இன்று நடைபெறும் அரையிறுதியில் ஹோல்ஜர் ரூனே, மெத்வதேவைச் சந்திக்கிறார்.
Next Story
×
X