என் மலர்
செய்திகள்
X
சோழவரம் அருகே கணவன்-மனைவியை கட்டிப்போட்டு நகை கொள்ளை
Byமாலை மலர்6 Jun 2016 10:48 AM IST (Updated: 6 Jun 2016 10:48 AM IST)
சோழவரம் அருகே கணவன், மனைவியை கட்டுப்போட்டு 23 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
மாதவரம்:
சோழவரத்தை அடுத்த ஜனப்பன் சத்திரம் கூட்டு ரோட்டில் வசித்து வருபவர் சண்முகசாமி. வீட்டின் முன் பகுதியில் மளிகைகடை வைத்துள்ளார். இவரது மனைவி சொர்ண மாரியம்மாள்.
மளிகை கடையில் விக்னேஷ் என்ற வாலிபர் வேலை பார்த்து வருகிறார். அவர் சண்முகசாமி வீட்டிலேயே தங்கி உள்ளார்.
நேற்று இரவு 3 பேரும் வீட்டில் டி.வி. பார்த்துக் கொண்டு இருந்தனர். அப்போது 6 பேர் கும்பல் திடீரென வீட்டுக்குள் புகுந்தனர். அவர்களில் ஒருவன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உடை அணிந்து இருந்தான்.
அவர்கள் ‘‘நாங்கள் போலீஸ்காரர்கள் உங்கள் வீட்டை சோதனை செய்ய வேண்டும். நகை - பணம் இருந்தால் கொடுங்கள்’’ என்றனர்.
‘‘சந்தேகம் அடைந்த ஊழியர் விக்னேஷ், மர்மகும்பலிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் விக்னேஷை சரமாரியாக தாக்கினர். இதில் அவர் மயங்கினார்.
உடனே சண்முகசாமி, அவரது மனைவி சொர்ணமாரியம்மாள் ஆகியோரை கத்தி முனையில் மிரட்டி நாற்காலியில் கட்டிப் போட்டனர். போகும் வரை கத்தக்கூடாது என்று எச்சரித்தனர்.
பின்னர் மர்ம நபர்கள் சொர்ணமாரியம்மாள் அணிந்து இருந்த 18 பவுன் செயின் பீரோவில் இருந்த 5 பவுன் நகையை கொள்ளையடித்து தப்பி சென்று விட்டனர்.
சிறிது நேரத்திற்கு பின்னர் சண்முகசாமியும் சொர்ணமாரியம்மாளும் கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டனர். படுகாயம் அடைந்த விக்னேஷை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது குறித்து சோழவரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
குடியிருப்புக்கு மத்தியில் உள்ள வீட்டில் போலீஸ் போல் நடித்து மர்ம கும்பல் நகை பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story
×
X