என் மலர்
செய்திகள்
X
உறவினர் வீட்டுக்கு கோடை விடுமுறைக்கு வந்த பெண் மகனுடன் மாயம்
Byமாலை மலர்6 Jun 2016 4:36 PM IST (Updated: 6 Jun 2016 4:36 PM IST)
கோடை விடுமுறைக்காக உறவினர் வீட்டுக்கு வந்த பெண் மகனுடன் மாயமானதால், போலீசர் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வருகிறார்கள்.
ஈரோடு:
சேலம் களரம்பட்டியை சேர்ந்தவர் நாராயணன். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 55). இவர்கள் தற்போது மும்பையில் வசிக்கிறார்கள். இவர்களுக்கு காமாட்சி, ரேவதி என இரு மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது.
காமாட்சிக்கு சேலத்தை சேர்ந்த கார் டிரைவர் அம்மாசி என்பவரருடன் திருமணம் நடந்தது. இவர்களும் தற்போது மும்பையில் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு அபூர்வா என்ற மகன் உள்ளான்.
ஒவ்வொரு ஆண்டும் ராஜேஸ்வரி ஈரோடு, மூலப்பாளையம், பச்சப்பள்ளி ரோடு பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு விடுமுறைக்கு வருவார். அதன்படி இந்த ஆண்டும் ராஜேஸ்வரி தனது மகள் காமாட்சி மற்றும் பேரன் அபூர்வாவுடன் ஈரோட்டில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்திருந்தார்.
இந்நிலையில் காமாட்சி திடீரென தனது மகனுடன் மாயமானார். ராஜேஸ்வரி தனது மகளையும், பேரனையும் நண்பர்கள், உறவினர் வீட்டில் தேடினார். எனினும் அவர்கள் குறித்து தகவல் ஏதும் கிடைக்கவில்லை.
இது குறித்து மும்பையில் உள்ள தனது மருமகன் அம்மாசிக்கு தகவல் கொடுத்தார். அவர் மனைவிக்கு செல்போன் அழைத்த போது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இது குறித்து ராஜேஸ்வரி ஈரோடு தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். மாயமான தனது மகள், பேரனை கண்டுபிடித்து தருமாறு புகாரில் கூறி உள்ளார்.
இது குறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான இருவரையும் தேடி வருகிறார்கள்.

Next Story
×
X