என் மலர்
செய்திகள்
X
குமரியில் மீண்டும் கடல் சீற்றம்: விவேகானந்தர் பாறைக்கு படகு போக்குவரத்து நிறுத்தம்
Byமாலை மலர்7 Jun 2016 11:37 AM IST (Updated: 7 Jun 2016 11:37 AM IST)
குமரியில் மீண்டும் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளதால் விவேகானந்தர் பாறைக்கு படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி:
குமரி மாவட்டத்தில் வழக்கமாக ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில் கடல் சீற்றமாக காணப்படும். ராட்சத அலைகளும் கரையை நோக்கி சீறிப்பாயும்.
குமரி மாவட்டத்தில் உள்ள 43 மீனவர் கிராமங்களான நீரோடி முதல் ஆரோக்கியபுரம் வரை கடல் கடும் சீற்றத்துடன் காணப்படும். ஆனால் இந்த ஆண்டு மே மாதமே கடலில் மாற்றங்கள் தென்பட்டன.
கடலில் ராட்சத அலைகளும் சூறாவளி காற்றும் தோன்றியது. இந்த அலைகள் கரையை தாண்டி மீனவர் கிராமங்களுக்குள்ளும் புகுந்தன. இரவிபுத்தன் துறை, சின்னத்துறை, தூத்தூர், தேங்காய்பட்டினம் உள்பட பல்வேறு கிராமங்கள் கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்டது.
இங்கு உள்ள கடல் அரிப்பு தடுப்பு சுவர்களும் பல இடங்களில் இடிந்து விழுந்தது. பல வீடுகளுக்குள்ளும் கடல்நீர் புகுந்தது. இதனால் இரவிபுத்தன்துறையில் வீடு இடிந்து ஒரு பெண் பலியான பரிதாப சம்பவமும் நடந்தது. மேலும் பலர் உறவினர் வீடுகளிலும் பாதுகாப்பான இடங்களிலும் தஞ்சம் அடைந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கடல் சீற்றம் சற்று குறைவாக காணப்பட்டது. இதனால் மீனவர் கிராமங்களில் இயல்பு நிலை திரும்பி வந்தது. தற்போது மீண்டும் கடல் சீற்றம் ஏற்பட்டு உள்ளது.
நேற்று இரவு முதல் இரவிபுத்தன்துறை, சின்னத்துறை, தூத்தூர், தேங்காய் பட்டினம், கோவளம் ஆகிய பகுதிகளில் கடல் கடும் கொந்தளிப்புடன் காணப்படுகிறது.
கடலில் 15 அடி முதல் 20 அடி வரை ராட்சத அலைகள் எழுந்து பயமுறுத்துகிறது. கரையை நோக்கி இந்த அலைகள் பாய்ந்து செல்வதால் பல மீனவர் கிராமங்களுக்குள் கடல் நீர் புகுந்தது. இதனால் மீனவ மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.
இரவிபுத்தன்துறை, உள்பட பல்வேறு இடங்களில் கடல் அரிப்பு தடுப்புச்சுவர்கள் இடிந்து விழுந்தன. கோவளத்தில் தூண்டில் வளைவு பாலம் இடிந்தது. சுமார் 10 அடி நீளத்திற்கு இந்த பாலம் இடிந்ததால் அந்த கற்களை கடல் அலைகள் இழுத்துச் சென்றன.
ராஜாக்கமங்கலம் துறை, அழிக்கால், மணக்குடி, குளச்சல் போன்ற பகுதிகளிலும் இந்த கடல் சீற்றம் நீடிக்கிறது. கடல் சீற்றம் காரணமாக பெரும்பாலான மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை.
கன்னியாகுமரியில் கடலின் நடுவே உள்ள பாறையில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்க படகு போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இன்று காலை 8 மணிக்கு வழக்கம்போல விவேகானந்தர் மண்டபத்திற்கு படகு போக்குவரத்து தொடங்கியது.
ஆனால் குறைந்த அளவு சுற்றுலா பயணிகளே இந்த படகுகளில் பயணம் செய்தனர். 2 முறை படகு போக்குவரத்து நடைபெற்ற நிலையில் கடலில் திடீரென்று கொந்தளிப்பு ஏற்பட்டது. ராட்சத அலைகளும் 10 அடி முதல் 15 அடி வரை எழுந்ததால் 8.15 மணிக்கு படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
விவேகானந்தர் மண்டபத்தில் இருந்த சுற்றுலா பயணிகள் உடனடியாக பாதுகாப்பாக படகுகளில் கரைக்கு அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து கடல் சீற்றமாக காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்க அஞ்சும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

Next Story
×
X