என் மலர்
செய்திகள்
X
வால்பாறை பகுதியில் தொடர்மழை: சோலையார் அணை நீர்மட்டம் ஒரே மாதத்தில் 21 அடி உயர்வு
Byமாலை மலர்7 Jun 2016 2:50 PM IST (Updated: 7 Jun 2016 2:50 PM IST)
வால்பாறை பகுதியில் தொடர்மழை பெய்து வருவதால் சோலையார் அணையின் நீர்மட்டம் ஒரே மாதத்தில் 21 அடி உயர்ந்துள்ளது.
வால்பாறை:
கோவை மாவட்டம் வால்பாறையில் தொடர்ந்து மழை பெய்துவருகிறது. தென்மேற்கு பருவமழை தற்போது தொடங்கியுள்ளது.
வால்பாறை பகுதியில் கடந்த மே மாதம் 10 -ந் தேதி முதல் தொடர்ந்து மழை பெய்துவருகிறது. கனமழையும், ஒருசில சமயங்களில் லேசான மழையும் விட்டுவிட்டு பெய்துவருகிறது.
நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு தொடங்கிய மழை இரவு முழுவதும் விடிய விடிய பெய்தது. இந்த மழை காரணமாக சோலையார் அணையின் நீர்மட்டம் மெதுவாக உயரத் தொடங்கியுள்ளது. தற்போது பெய்து கொண்டிருக்கும் மழையால் சோலையார் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்து வருகிறது.
கடந்த 24 மணிநேரத்தில் வால்பாறையில் 25 மிமீ மழையும், சோலையார் அணையில் 9 மிமீ, நீராரில் 15மிமீ, சின்னக்கல்லாரில் 17மிமீ மழையும் பெய்துள்ளது.
சோலையார் அணைக்கு வினாடிக்கு 210.65 கன அடித்தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் சோலையார் அணையின் நீர்மட்டம் 23.08 அடியாக உயர்ந்துள்ளது.
கடந்த மாதத்தில் அணையின் நீர்மட்டம் 2 அடியாக இருந்தது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஒரே மாதத்தில் அணையில் நீர்மட்டம் 21 அடி உயர்ந்துள்ளது.
நேற்றும் அதிகாலை முதல் லேசான சாரல் மழை அவ்வப்போது பெய்து வருகிறது. இதனால் மேலும் சோலையார் அணையின் நீர்மட்டம் உயர்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story
×
X