என் மலர்
செய்திகள்
X
நவீன உலகில் வினோத நிகழ்வு: பூனைக்குட்டிக்கு பாலூட்டி வளர்த்து வரும் செல்ல நாய்
Byமாலை மலர்7 Jun 2016 3:36 PM IST (Updated: 7 Jun 2016 3:36 PM IST)
கீரிக்கும், பாம்புக்கும் பகை என்று கூறும் இந்த உலகம் நாய், பூனையையும் அப்படியே பார்த்து வந்தது. ஆனால் இதற்கு நேர்மாறாக ஒருவர் தன் வீட்டில் வளர்க்கும் நாயிடம் பூனை பால்குடித்து வரும் ஓர் விநோதமான அதிசய நிகழ்வு நடைபெற்று வருகிறது.
மணப்பாறை:
திருச்சி மாவட்டம், மருங்காபுரி ஒன்றியப்பகுதி ஊத்துக்குழியைச் சேர்ந்தவர் சுப்ரமணி. விவசாயியான இவர் ஓர் சிறிய வீட்டில் வசித்து வருகிறார். நாய்கள் மற்றும் பூனை வளர்ப்பதில் அதீத ஆர்வம் கொண்ட சுப்ரமணி தன் வீட்டில் 5 நாய்கள் வளர்த்து வருகிறார். மேலும் இந்த நாய்கள் மிகவும் திறமையாக வேட்டையாடும் வகையில் அவற்றை தயார்படுத்தி வைத்துள்ளார்.
இருப்பினும் அவர் பூனையும் வளர்க்க ஆசைப்பட்டார். அதன்படி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஒரு குட்டிப் பூனையை வீட்டிற்கு எடுத்து வந்து பால் ஊற்றி வளர்த்தார். ஆனால் அதை அந்தப் பூனை பால் குடிக்க சிரமப்பட்டது.
இந்நிலையில் அவர் வீட்டில் வளர்த்த நாய் ஒன்று குட்டி போட்டது. சில மாதத்தில் நாய் குட்டிகளை பலரும் தூக்கி சென்றனர். அப்போது தான் அந்த பூனைக்குட்டி நாயிடம் பால் குடிக்கச் சென்றது. அப்போது நாய் ஏதும் செய்யாமல் தன் குட்டிகளுக்கு பால் கொடுப்பது போல் நினைத்துக் கொண்டு பூனைக்கும் பால் கொடுத்தது.
இது படிப்படியாக வளர்ந்து சுமார் 5 மாதங்களாக (தற்போது வரை) நீடிக்கிறது. வெளியில் செல்லும் நாள் வீட்டிற்கு திரும்பியதும் பூனை ஓடோடிச் சென்று நாயின் அருகில் படுத்துக் கொள்வதுடன் உடனே பால்குடிக்க ஆரம்பித்து விடுகிறது. இப்படி நாயிடம் பால்குடித்த பூனைக்குட்டி மிகவும் திடகாத்திரமாக உள்ளதுடன் துள்ளித் திரிந்து விளையாடியும் வருகிறது. இதுமட்டுமின்றி இந்த பூனைக்குட்டியை நாய்கள் விரட்டி வந்தால் அந்த நாயை பாலூட்டும் நாய் விரட்டி அடித்து விடுகிறது. மிகவும் பிரமிக்க வைக்கும் வகையில் உள்ள நிகழ்ச்சியை அந்த கிராம மக்கள் முற்றிலும் விநோதமாக பார்க்கின்றனர். இதுமட்டுமின்றி பலரும் தங்களின் செல்போன்களில் படம் பிடித்துச் செல்கின்றனர்.
வீட்டில் வளர்க்கும் போதே பூனையும்-நாயும் ஒன்றுடன் ஒன்று சேராமல் விரட்டி அடிக்கும் இந்த கால கட்டத்தில் குட்டியாக வந்த ஒரு பூனைக்கு தான் ஈன்ற குட்டி போல் நினைத்து நாய் பாலூட்டி வருவது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

Next Story
×
X