search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பால் காய்கறிகள் விலை வீழ்ச்சி
    X

    ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பால் காய்கறிகள் விலை வீழ்ச்சி

    ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் பெரும்பாலான காய்கறிகள் வரத்து அதிகரிப்பின் காரணமாக விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு சுற்றுப்புற பகுதிகளில் இருந்தும் பல ஊர்களில் இருந்தும் தினசரி காய்கறிகள் விவசாயிகளால் கொண்டு வரப்படுகிறது. இந்த காய்கறிகள் தமிழகத்தின் பல பகுதிகளுக்கும், கேரளாவுக்கும் அதிகளவு கொண்டு செல்லப்படுகிறது.

    கடந்த சில வாரங்களாகவே காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக ஆடி மாதத்துக்கு பின் காய்கறிகள் தேவை குறைந்துள்ளதாலும், வரத்து அதிகரித்துள்ளதாலும் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.

    முருங்கைக்காய் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை கிலோ ரூ.33 என விற்கப்பட்டது. ஆனால் தற்போது கிலோ ரூ.20 முதல் 22 வரை விற்கப்படுகிறது. பல கிராமங்களில் இருந்து முருங்கைக்காய் கத்தை கத்தையாக விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

    வெங்காயத்தைப் பொறுத்தவரையில் பதப்படுத்தி வைத்திருந்த வெங்காயம் கிலோ ரூ.10-க்கு வாங்கப்படுகிறது. அதையும் நடவுக்காக விவசாயிகள் வாங்கிச் செல்கின்றனர். புதிய வெங்காயம் கிலோ ரூ.22-க்கு விற்கப்படுகிறது. தக்காளி கிலோ ரூ.10, பீட்ரூட் ரூ.13, வெண்டைக்காய் ரூ.7, சுரைக்காய் ரூ.5, பீன்ஸ் மற்றும் தட்டைப்பயிறு ரூ.18 என்ற விலையில் விற்கப்படுகிறது.

    கடந்த சில நாட்களாக கிலோ ரூ.50-க்கு விற்கப்பட்ட பச்சை மிளகாய் தற்போது ரூ.40-க்கும், சாம்பார் பூசணி கிலோ ரூ.9-க்கும் விற்பனையாகிறது. ஆடி மாதம் திருமண பண்டிகை இல்லாததாலும் கிடா வெட்டு போன்ற நிகழ்ச்சிகள் அதிகளவில் நடப்பதாலும் காய்கறிகள் தேவை குறைந்துள்ளது. இதனால் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×