என் மலர்
செய்திகள்
X
சட்டசபை தேர்தல் தோல்வியால் துவண்டு போய் விடவில்லை: பார்த்த சாரதி பேச்சு
Byமாலை மலர்26 July 2016 9:48 AM IST (Updated: 26 July 2016 9:48 AM IST)
ஈரோடு தெற்கு மாவட்ட தே.மு.தி.க. ஆலோசனை கூட்டத்தில் சட்டசபை தேர்தல் தோல்வியால் துவண்டு போய் விடவில்லை என்று மாநில தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி பேசினார்.
ஈரோடு:
ஈரோடு தெற்கு மாவட்ட தே.மு.தி.க. ஆலோசனை கூட்டம் மாவட்ட பொறுப்பாளர் கோபால் தலைமையில் நடந்தது. அவை தலைவர் பொன் சேர்மன் வரவேற்றார்.
கூட்டத்தில் மாநில தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க-தி.மு.க. ஆகிய இரு கட்சிகளும் பல கோடி ரூபாய் செலவு செய்து வாக்குகளை பெற்றனர்.
ஆனால் தே.மு.தி.க.வுக்கு கிடைத்த 10 லட்சம் ஓட்டுகளும் நேர்மையான முறையில் கிடைத்த ஓட்டுகள். எனவே சட்டசபை தேர்தல் தோல்வியால் நாங்கள் சோர்வடையவில்லை. துவண்டு போகவும் இல்லை.
இந்த தேர்தல் தோல்வி காரணமாக முரசு சின்னம் முடக்கப்பட்டதாக சிலர் வதந்தியை கிளப்புகிறார்கள். ஆனால் அது உண்மையல்ல.
கடந்த காலங்களில் ம.தி.மு.க. மற்றும் இடதுசாரி கட்சிகளின் அங்கீகாரம் ரத்தான போது அவர்கள் அதே சின்னத்தில் தான் போட்டியிட்டனர். எனவே வருகிற உள்ளாட்சி தேர்தலிலும் தே.மு.தி.க முரசு சின்னத்தில் போட்டியிடும்.
ஒரு கட்சியில் இருந்து விலகுவது அவர்களின் சொந்த விஷயம். ஆனால் விலகிய பிறகு தாங்கள் இருந்து வந்த கட்சி பற்றி தரக்குறைவாக விமர்சனம் செய்வது நாகரீகம் இல்லை. தே.மு.தி.க. பற்றியும் கட்சி தலைவர் விஜயகாந்த் பற்றியும் சந்திரகுமார் விமர்சனம் செய்வதை இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாநில பொருளாளர் இளங்கோ, துணை செயலாளர்கள் ஜாகிர் உசேன், உமாநாத், ஆகியார் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.
பகுதி செயலாளர்கள் நைனாமலை, பாலகிருஷ்ணன், ரங்கராஜ், வரதராஜ், கணேசன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் நமச்சிவாயம் நன்றி கூறினார்.
கூட்டத்தில் தே.மு.தி.க. மாநில தலைமை நிலைய செயலாளர் பார்த்த சாரதி பேசிய போது எடுத்த படம்.

Next Story
×
X