என் மலர்
செய்திகள்
X
7 ஆண்டுக்கு முன்பு மாயமான சத்தீஷ்கர் விவசாயி சென்னையில் மீட்பு
Byமாலை மலர்26 July 2016 2:07 PM IST (Updated: 26 July 2016 2:07 PM IST)
கடந்த 7 ஆண்டு முன்பு மனநலம் பாதிக்கப்பட்டு ரெயில் மூலம் சென்னை சென்டிரலுக்கு வந்த நெலால் ஆனந்துக்கு நினைவு திரும்பியதையடுத்து சத்தீஷ்கரில் உள்ள அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.
ஆலந்தூர்:
மணப்பாக்கத்தை சேர்ந்தவர் ராஜன். இவர் அதே பகுதியில் மனநல காப்பகம் ஒன்றை நடத்தி வருகிறார்.
இங்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு நந்தம்பாக்கம் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றி திரிந்த ஒரு நபரை கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு நினைவு திரும்பியது.
இதையடுத்து அவர் தனது பெயர் நெலால் ஆனந்த் (36) என்றும், சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் என்றும் கூறினார்.
இதை போலீசார் சத்தீஸ்கர் போலீசில் தெரிவித்தனர். பின்னர் விசாரணை நடத்தி சத்தீஸ்கர் மாநிலம் பரஸ்வாணயை சேர்ந்த அவரது உறவினர்கள் சென்னைக்கு வந்தனர். அப்போது நெலால் ஆனந்த் இவர்கள் தனது உறவினர்கள் என்று கூறினார்.
மேலும் நெலால் ஆனந்துக்கு திருமணம் ஆகி ஆமிமுன்கூராபாய் என்ற மனைவியும், சத்திரபிரகாஷ் (14) என்ற மகனும் உள்ளது தெரியவந்தது. விவசாயியான நெலால் ஆனந்த் விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் மனம் உடைந்தார்.
அதனால் மனநலம் பாதிக்கப்பட்டு கடந்த 7 ஆண்டு முன்பு ரெயில் மூலம் சென்னை சென்டிரலுக்கு வந்து உள்ளார் என்று தெரியவந்தது. இதைத் தொடர்ந்து நெலால் ஆனந்த் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.

Next Story
×
X