என் மலர்
செய்திகள்
தாம்பரம் அருகே தி.மு.க. கவுன்சிலர் கொலையில் உறவினர்களிடம் விசாரணை
ஸ்ரீபெரும்புதூர்:
தாம்பரத்தை அடுத்த படப்பை பெரியார் நகரை சேர்ந்தவர் தனசேகரன். இவர் படப்பை ஊராட்சி 6-வது வார்டு கவுன்சிலராகவும், ஊராட்சி தி.மு.க. இளை ஞர் அணி செயலாளராகவும் இருந்தார்.
நேற்று காலை அவர் அதே பகுதி டேவிட் நகரில் உள்ள தேவாலயத்துக்கு சென்றார். அப்போது மர்ம கும்பல் அவரை ஓட ஓட விரட்டி தேவாலய வளாகத்திலேயே வெட்டிக் கொன்றனர்.
இது குறித்து மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொலையுண்ட தனசேகரன் லாரி மற்றும் ஜே.சி.பி. எந்திரங்களை வைத்து சவுடு மண் குவாரி எடுத்து நடத்தி வந்தார். இதில் ஏற்பட்ட மோதலில் கொலை நடந்து இருக்கலாம் என்று போலீசார் விசாரணையை தொடங்கினர்.
இதற்கிடையே தனசேகரனின் உறவினர்கள் 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகிறார்கள். உள்ளாட்சி தேர்தலில் மீண்டும் தனசேகரன் போட்டியிட முடிவு செய்து இருந்தார்.
இதிலும் சிலருடன் தகராறு ஏற்பட்டு இருக்கிறது. எனவே உள்ளாட்சி தேர்தல் தகராறில் கொலை நடந்ததா? என்று உறவினர்களிடம் விசாரணை நடக்கிறது.
கொலையில் ஈடுபட்டது கூலிப்படையினர் என்று தெரியவந்துள்ளது. அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.