search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை செய்து கொண்ட இன்ஸ்பெக்டர் ராகவேந்திரா.
    X
    தற்கொலை செய்து கொண்ட இன்ஸ்பெக்டர் ராகவேந்திரா.

    ஓசூர் அருகே போலீஸ் நிலையத்தில் துப்பாக்கியால் சுட்டு கர்நாடக இன்ஸ்பெக்டர் தற்கொலை

    ஓசூர் அருகே போலீஸ் நிலையத்திற்குள் இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டு கொண்டு தற்கொலை செய்து கொண்டதால் போலீஸ்காரர்கள் இடையேயும், அப்பகுதி பொதுமக்கள் இடையேயும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.
    ஓசூர்:

    கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் மாலூர் உள்ளது. இந்த ஊர் தமிழக-கர்நாடக எல்லையையொட்டி ஓசூரின் அருகில் அமைந்துள்ளது.

    இந்த மாலூரில் உள்ள போலீஸ் நிலையத்தில் ராகவேந்திரா என்பவர் சர்க்கிள் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்தார். இன்று காலை அவர் வழக்கம்போல் பணிக்கு வந்தார்.

    அப்போது தனக்கு ஒதுக்கப்பட்ட அறையில் வழக்கம் போல் பணிகளை பார்த்து கொண்டிருந்தார். அங்கு திடீரென துப்பாக்கி வெடித்த சத்தம் கேட்டது. சத்தத்தை கேட்ட மற்ற போலீஸ்காரர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே இன்ஸ்பெக்டர் அறையின் உள்ளே சென்று பார்த்தனர்.

    அங்கு இன்ஸ்பெக்டர் ராகவேந்திரா அவருக்கு கொடுக்கப்பட்ட ரீவல்ரை நெற்றியில் வைத்து தன்னைத் தானே சுட்டுக் கொண்டு பிணமாக கிடந்தார்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மற்ற போலீஸ்காரர்கள் கோலார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திவ்யா கோபிநாத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த போலீஸ் சூப்பிரண்டு சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்.

    மேலும் பிணத்தை பிரேத பரிசோதனைக்காக கோலார் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இன்ஸ்பெக்டர் ராகவேந்திரா மனஅழுத்ததால் தற்கொலை செய்துக் கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இன்ஸ்பெக்டர் போலீஸ் நிலையத்திற்குள் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு கொண்டு தற்கொலை செய்து கொண்டதால் போலீஸ்காரர்கள் இடையேயும், அப்பகுதி பொதுமக்கள் இடையேயும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.
    Next Story
    ×