என் மலர்
செய்திகள்
X
ராஜபாளையம் அருகே லாரி மோதி விபத்து: தந்தை கண் முன்பு மகன்-மகள் பலி
Byமாலை மலர்4 April 2017 10:47 AM IST (Updated: 4 April 2017 10:47 AM IST)
பள்ளிக்கு அழைத்து சென்றபோது தந்தை கண் முன்பு மகன்-மகள் லாரி மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள கோவிலூர் கிராமத்தைச்சேர்ந்தவர் காசிமணி (வயது35). இவரது மனைவி முத்து. இவர்களுக்கு ராமகிருஷ்ணன் (14) என்ற மகனும், கீர்த்தனா (12) என்ற மகளும் இருந்தனர்.
கிருஷ்ணாபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ராமகிருஷ்ணன் 9-ம் வகுப்பும், கீர்த்தனா 7-ம் வகுப்பும் படித்து வந்தனர். தினமும் 2 பேரையும் மோட்டார் சைக்கிளில் காசிமணி பள்ளிக்கு அழைத்து செல்வது வழக்கம்.
அதன்படி இன்று காலை மகன், மகளை தனது மோட்டார் சைக்கிளில் காசிமணி பள்ளிக்கு அழைத்து சென்றார். ராஜபாளையம்-தென்காசி ரோட்டில் உள்ள சேத்தூர் பாரதிநகர் அருகில் சென்ற போது முன்னால் சென்று கொண்டிருந்த லாரியை காசிமணி முந்த முயன்றார்.
அப்போது எதிரே வேகமாக ஒரு தனியார் பள்ளியின் பஸ் வந்தது. மோட்டார் சைக்கிள் வருவதை பார்த்த அந்த பஸ் டிரைவர் பஸ்சை நிறுத்தினார். ஆனாலும் காசிமணி அந்த பஸ்சின் முன்பகுதியில் மோதினார்.
இந்த மோதலில் மோட்டார் சைக்கிள் நிலைகுலைந்தது. பின்னால் அமர்ந்திருந்த ராமகிருஷ்ணன், கீர்த்தனா ஆகியோர் இடதுபுறமாக கீழே விழுந்தனர். அப்போது பின்னால் வந்து கொண்டிருந்த லாரி எதிர் பாராதவிதமாக இரண்டு பேர் மீதும் ஏறியது. இதில் தலைநசுங்கி ராமகிருஷ்ணன், கீர்த்தனா ஆகியோர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தனர். தன் கண் முன்னே மகன் - மகள் விபத்தில் சிக்கி இறந்ததை பார்த்த காசிமணி கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
விபத்து குறித்து தகவல் அறிந்த சேத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாமணி மற்றும் போலீசார் சம்பவ இடம் வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Next Story
×
X