என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
செய்திகள்
![பண்ருட்டி அருகே நர்சை கொன்று ஆற்றில் பிணம் புதைப்பு: போலீசார் விசாரணை பண்ருட்டி அருகே நர்சை கொன்று ஆற்றில் பிணம் புதைப்பு: போலீசார் விசாரணை](https://img.maalaimalar.com/Articles/2017/Jul/201707202250076374_nurse-killed-Burial-corpse-in-river-police-investigation_SECVPF.gif)
பண்ருட்டி அருகே நர்சை கொன்று ஆற்றில் பிணம் புதைப்பு: போலீசார் விசாரணை
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள புலியூர் காட்டு சாகையை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகள் திவ்யா. இவர் பி.எஸ்.சி.நர்சிங் படித்து விட்டு சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வந்தார்.
கடந்த மே மாதம் 8-ந் தேதி விடுமுறையில் பண்ருட்டி அருகே உள்ள சாத்தம்பட்டு கிராமத்தில் வசித்து வரும் தனது அக்காள் ஜெகதீஸ்வரி வீட்டுக்கு வந்திருந்தார். பின்னர் அவர் சென்னை செல்வதாக கூறிச் சென்றார். ஆனால் அவர் சென்னை செல்லவில்லை.
இதனைத்தொடர்ந்து அவரது தந்தை சக்திவேல் திவ்யாவை பல இடங்களில் தேடி பார்த்தார். எங்கும் அவரை காணவில்லை. இதுகுறித்து அவர் காடாம்புலியூர் போலீசில் புகார் செய்தார். இந்த வழக்கை துரிதப்படுத்தும் படி துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் போலீசாருக்கு அறிவுரை வழங்கினார்.
அதன்பேரில் போலீசார் பல்வேறு கோணங்களில் மாயமான நர்ஸ் பற்றி விசாரணை நடத்தினர். மேலும் அவர் செல்போனில் யார்? யாரிடம் பேசினார் என்பது குறித்தும் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பண்ருட்டி அருகே உள்ள திருவாமூர் கிராமத்தை சேர்ந்த அவரது தோழியிடம் திவ்யா பேசியது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியபோது திவ்யா கொலை செய்யப்பட்டு பண்ருட்டி அருகே காமாட்சி பேட்டை ஆற்றங்கரையில் பிணம் புதைக்கப்பட்டது தெரியவந்தது.
போலீசார் பிணத்தை தோண்டி எடுக்க முடிவு செய்துள்ளனர். அவரை கொலை செய்தது யார்? காதல் தகராறில் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வருகின்றனர்.