என் மலர்
செய்திகள்
X
மன்னார்குடியில் 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் - ஆஸ்பத்திரியில் சிகிச்சை
Byமாலை மலர்2 Aug 2017 9:39 AM IST (Updated: 2 Aug 2017 9:39 AM IST)
மன்னார்குடி அருகே உள்ள பரவாக்கோட்டையை சேர்ந்த 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. அவர்கள் மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மன்னார்குடி:
தமிழகத்தில் சென்னை, ஈரோடு உள்பட சில மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதையொட்டி உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி உள்ளதா? என அரசு மருத்துவமனைகளில் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மன்னார்குடி அருகே உள்ள பரவாக்கோட்டையை சேர்ந்த 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. அவர்கள் மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.
இதைத்தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுபடுத்த மருத்துவக்குழு அமைத்து சிகிச்சை அளிக்க வேண்டும். நிலவேம்பு கசாயம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மன்னார்குடி பகுதியில் 6 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story
×
X