என் மலர்
செய்திகள்
X
வேலூர் ஜெயிலில் ஜீவ சமாதி: சாப்பிட மறுத்து வடக்கு நோக்கி தியானம் செய்யும் முருகன்
Byமாலை மலர்19 Aug 2017 10:31 AM IST (Updated: 19 Aug 2017 10:31 AM IST)
வேலூர் ஜெயிலில் முருகன் நேற்று முதல் சாப்பிடாமல் அறையில் வடக்கு நோக்கி தியானத்தில் ஈடுபட்டுள்ளார். முருகன் மனு அளிக்காததால் இன்று நளினியுடனான சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.
வேலூர்:
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் ஜெயிலில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் கடந்த சில மாதங்களாக காவி உடை அணிந்து, ஜடாமுடி தரித்து சாமியார் போல் நடமாடி வருகிறார். அவர் ஜெயிலிலேயே ஜீவ சமாதி அடையப்போவதாக கூறி, அதற்கு அனுமதி அளிக்கும் படி கூடுதல் டிஜிபிக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.
ஜீவசமாதி அடைய முருகன் திட்டமிட்ட நாளான நேற்று காலையில் கோவிலுக்கு சென்று நீண்ட நேரம் சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோவிலை விட்டு வெளியே வந்த அவர் அதிகாரிகளிடம் ஜீவசமாதி இருக்க போவதாக கூறினார். அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.
இதனால் விரக்தியடைந்த முருகன், நேற்று காலை முதல் உணவு எதுவும் சாப்பிடாமல் அவர் தங்கியிருக்கும் அறையில் இருந்து வடக்கு நோக்கி தியானத்தில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து தியான நிலையிலே இருந்து வருகிறார். இன்று காலையிலும் சாப்பிட மறுத்து விட்டார்.
முன்னதாக, சிறை கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம் மூலம் தமிழக முதல்வருக்கு கடிதம் ஒன்றை முருகன் அனுப்பியுள்ளார். அதில், கடந்த 26 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறேன். இனிமேல் தண்டனை அனுபவிக்க மனம் ஒப்பவில்லை. சிறையில் காவி தரித்து வாழ்ந்து வருகிறேன். கடந்த சில ஆண்டுகளாக என்னுடைய விடுதலைக்காக பல முறை போராட்டம் நடத்தி விட்டேன். அதற்கு எந்த பலனுமில்லை. எனவே நான் ஜீவசமாதி அடையும் போது ஜெயில் போலீசார் என்னை தடுக்ககூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து ஜெயில் அதிகாரி ஒருவர் கூறுகையில், முருகன் ஜீவ சமாதி அடைவதை சிறை விதிகள் அனுமதிக்கவில்லை.
தொடர்ந்து அவர் உணவு உண்ணாமல், இதுபோன்று ஜெயில் விதிகளை மீறி செயல்பட்டு வந்தால் அவருக்கு வழங்கப்படும் சலுகைகளாக கோர்ட்டு உத்தரவுபடி அவர் மனைவி நளினியை 15 நாட்கள் ஒருமுறை சந்திப்பது, அவரை காண யாராவது வந்தால் அனுமதிப்பது உள்பட அனைத்து சலுகைகளும் ரத்து செய்யப்படும் என்றார்.
இந்நிலையில் இன்று நடைபெற இருந்த நளினி-முருகன் சந்திப்பு நடைபெறவில்லை. நளினியை சந்திக்க முருகன் மனு அளிக்காததால் இந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.
தியான நிலையில் உள்ள முருகனை ஜெயில் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Next Story
×
X