என் மலர்
செய்திகள்
X
டெண்டர் வழங்க லஞ்சம்: கைதான வட்டார வளர்ச்சி அலுவலர் பாளை சிறையில் அடைப்பு
Byமாலை மலர்14 Sept 2017 3:47 PM IST (Updated: 14 Sept 2017 3:47 PM IST)
டெண்டருக்கான பணி ஆணை வழங்குவதற்கு லஞ்சம் வாங்கியதால், வட்டார வளர்ச்சி அலுவலர் கைது செய்யப்பட்டு பாளை சிறையில் அடைக்கப்பட்டார்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவிலை அடுத்த கீழநீலிதநல்லூர் அருகேயுள்ள ஆயால்பட்டியைச் சேர்ந்தவர் பொன்ராஜ். இவர் மேலநீலிதநல்லூர் யூனியன் அலுவலகத்தின் மூலம் ஆயால் பட்டியில் ரூ.4.5 லட்சத்திலும், பனவடலிசத்திரம் கிழக்கு பகுதியில் ரூ.2.5 லட்சத்திலும் நடைபெற உள்ள குடிநீர் திட்டப்பணிகளை டெண்டர் எடுத்து உள்ளார்.
அதற்கான பணி ஆணையை பெறுவதற்காக மேலநீலிதநல்லூர் யூனியன் அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அதிகாரியாக பணியாற்றி வரும் பிச்சுமணியை தொடர்பு கொண்டார். அப்போது அவர் தனக்கு ரூ.35 ஆயிரம் லஞ்சம் தந்தால்தான் பணி ஆணை வழங்குவேன் என்று கூறியுள்ளார்.
அவ்வளவு பணம் தன்னால் வழங்க இயலாது என்று பொன்ராஜ் மறுப்பு தெரிவித்தார். பின்னர் ரூ.21 ஆயிரம் தரும்படி பிச்சுமணி கேட்டார். அதற்கு பொன்ராஜ் ஒப்புக்கொண்டு அங்கிருந்து வந்து விட்டார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத பொன்ராஜ், இதுகுறித்து நெல்லை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
அப்போது போலீசார் பொன்ராஜிடம் ரசாயனம் தடவிய ரூ.21 ஆயிரத்தை கொடுத்து அதை பிச்சுமணியிடம் கொடுக்குமாறு கூறி அனுப்பி வைத்தனர். பின்பு லஞ்ச ஒழிப்பு துறை துணைபோலீஸ் சூப்பிரண்டு மதியழகன் ஆலோசனையின் பேரில் பொன்ராஜ் நேற்று மேலநீலிதநல்லூர் யூனியன் அலுவலகத்துக்கு சென்று வட்டார வளர்ச்சி அதிகாரி பிச்சுமணியிடம் ரசாயனம் தடவிய ரூ.21 ஆயிரத்தை கொடுத்தார்.
அதனை பிச்சுமணி வாங்கிய போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு மதியழகன் தலைமையிலான போலீசார், பிச்சுமணியை கையும், களவுமாக மடக்கி பிடித்தனர். பின்பு அவரிடம் சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்திய பின் வழக்கு பதிந்து கைது செய்து நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
பிச்சுமணியை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதையடுத்து அவர் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story
×
X