என் மலர்
செய்திகள்
X
பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு எப்போது?: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
Byமாலை மலர்2 Oct 2017 6:17 PM IST (Updated: 2 Oct 2017 6:17 PM IST)
பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் எப்போது திறக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு:
பவானிசாகர் அணையின் தற்போதைய நீர் மட்டம் 82 அடியாக உள்ளது. அணையின் நீர் பிடிப்பு பகுதியில் மிதமான மழை பெய்து வருவதால் அணைக்கும் தொடர்ந்து மிதமான அளவில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
இன்று(திங்கட்கிழமை) காலை 9 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 1283 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நீர்மட்டம் 82 அடியை எட்டி உள்ளது.
பவானிசாகர் அணையின் நீர் மட்டம் உயர்ந்து உள்ளதால் பாசனத்துக்கு உடனடியாக தண்ணீர் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதற்கிடையே டெல்டா மாவட்ட விவசாயிகள் கோரிக்கையை ஏற்று மேட்டூர் அணை இன்று திறக்கப்பட்டது.
இதே போல் ஈரோடு மாவட்ட வாய்க்கால்களிலும் பாசனத்துக்கு பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என ஈரோடு மற்றும் திருப்பூர், கரூர் மாவட்ட கடைமடை விவசாயிகள் கேட்டு கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள பழனிகவுண்டன் பாளையத்தில் ரூ.1 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட தார்சாலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது.-
ஈரோடு மாவட்டத்தில் 386 குளங்கள் தூர்வாரப்பட்டு உள்ளது. இதனால் மழை நீரை அதிகமாக சேமிக்கலாம். பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். அவர்களின் கோரிக்கையினை ஏற்று பவானிசாகர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும். திறக்கும் தேதியை அரசு சார்பில் நாளை(செவ்வாய்க்கிழமை) அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story
×
X