என் மலர்
செய்திகள்
திருச்சுழியில் டாஸ்மாக் ஊழியர்களை தாக்கி ரூ.2 லட்சம் கொள்ளை
காரியாபட்டி:
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ள திருச்சுழி பள்ளிமடம் பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு சூப்பர்வைசராக பச்சேரியைச் சேர்ந்த மாரியப்பன் (வயது 40) பணியாற்றி வருகிறார். விற்பனையாளராக முத்துக் கருப்பன் பணி செய்து வந்தார்.
நேற்று இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை அடைத்த இவர்கள் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டனர். ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் கடை இருப்பதால் விற்பனைத்தொகையை கையில் எடுத்துச் செல்வது வழக்கம்.
அதன்படி நேற்றைய விற்பனைத் தொகை ரூ.2 லட்சத்து 5 ஆயிரத்து 500-யை எடுத்துக் கொண்டு 2 பேரும் சென்றனர்.
ஒரு வளைவில் சென்றபோது 3 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை கண்டதும் மாரியப்பன் மோட்டார் சைக்கிள் வேகத்தை குறைத்துள்ளார். அப்போது அந்த 3 பேரும் திடீரென மிளகாய் பொடியை மாரியப்பன் மற்றும் முத்துக்கருப்பன் மீது வீசினர்.
இதில் அதிர்ச்சியடைந்த அவர்கள் நிலை குலைந்த நேரத்தில் கையில் இருந்த பணப்பையை மர்ம மனிதர்கள் பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டனர்.
இந்த சம்பவத்தின் போது மாரியப்பன், முத்துக்கருப்பன் ஆகியோர் தாக்கப்பட்டதாகவும் திருச்சுழி போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை பறித்துச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
தாக்குதலில் காயம் அடைந்த மாரியப்பன், முத்துக் கருப்பன் சிகிச்சைக்காக திருச்சுழி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். #Tasmacrobbery