என் மலர்
செய்திகள்
X
சோதனைக்கு காரை நிறுத்தாமல் சென்றதால் சேலத்தில் டி.டி.வி.தினகரன் மீது வழக்கு
Byமாலை மலர்4 April 2019 5:52 PM IST (Updated: 4 April 2019 5:52 PM IST)
பறக்கும் படை அதிகாரிகளின் சோதனைக்கு காரை நிறுத்தாமல் சென்றதாக டி.டி.வி. தினகரன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். #TTVDinakaran
சேலம்:
சேலம் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்குவதை தடுப்பதற்காக 33 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இவர்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகள் மற்றும் முக்கிய சாலைகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வாகன சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த 31-ந்தேதி தேர்தல் பறக்கும் படை அதிகாரி மணிமேகலை தலைமையில் அதிகாரிகள் சேலம் ஆச்சாங்குட்டப்பட்டி சோதனை சாவடியில் வாகன சோதனை நடத்திக்கொண்டிருந்தனர். அப்போது அயோத்தியாப்பட்டணத்தில் தனது கட்சி வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்வதற்காக அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் காரில் வந்தார். அவரை தொடர்ந்து மற்ற சில கார்களும் வந்தன.
இதையொட்டி அதிகாரிகள் டி.டி.வி. தினகரன் வந்த காரை சோதனை செய்வதற்காக வழி மறித்தனர். அப்போது அவரது கார் மற்றும் அவரை பின்தொடர்ந்து வந்த கார்கள் நிற்காமல் சென்றதாக கூறி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் பறக்கும் படை அதிகாரி மணிமேகலை வீராணம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் பறக்கும் படை அதிகாரிகளின் சோதனைக்கு காரை நிறுத்தாமல் சென்றதாக டி.டி.வி. தினகரன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். #TTVDinakaran

Next Story
×
X