என் மலர்
செய்திகள்
X
நாமக்கல் அருகே ஒரே குடும்பத்தில் 3 பேர் தீக்குளித்து தற்கொலை
Byமாலை மலர்19 April 2019 11:45 AM IST (Updated: 19 April 2019 11:15 PM IST)
நாமக்கல் அருகே குடும்ப தகராறு காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல்:
திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள கருங்காளி ஊர் உடையார்பட்டி பகுதியை சேர்ந்தவர் பன்னீர் செல்வம். இவரது மனைவி நாகராணி. இவர்களுக்கு குணா(வயது 8) மற்றும் சந்தோஷ் (6) என்ற 2 மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் கணவன், மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று இவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த நாகராணி வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து அவர் மீதும் மகன்கள் மீதும் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அப்போது அவர்கள் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்து அவர்கள் 3 பேரையும் மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இதில் குணா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நாகராணி மற்றும் சந்தோசை மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இன்று காலை 2 பேரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து முசிறி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை செய்தது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story
×
X