என் மலர்
செய்திகள்
X
குற்றாலம் பகுதியில் சாரல் மழை - அருவிகளில் குளிக்க அலைமோதிய சுற்றுலா பயணிகள்
Byமாலை மலர்29 July 2019 11:14 AM IST (Updated: 29 July 2019 11:14 AM IST)
குற்றாலம் பகுதியில் சாரல் மழை பெய்து வருவதால் மெயினருவியில் மிதமான அளவில் தண்ணீர் விழுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் கூட்டம் இன்றும் அதிகமாக இருந்தது.
தென்காசி:
தென்மேற்கு பருவ மழையை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு ஆகிய 3 மாதங்கள் குற்றாலத்தில் சீசன் களை கட்டும். இதைத்தொடர்ந்து நெல்லை மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் திரண்டு வருவார்கள்.
இந்த ஆண்டு ஜூன் மாதம் 2-வது வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதனால் குற்றாலத்தில் தண்ணீர் வரத்தொடங்கியது. ஆனால் தொடர்ந்து மழை இல்லாத காரணத்தால் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து முற்றிலும் குறைந்தது. இதனால் இந்த ஆண்டு சீசன் இருக்குமா என்ற சந்தேகம் எழுந்தது.
இந்நிலையில் கடந்த வாரம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்த காரணத்தினால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டியது. ஆனால் கடந்த சில தினங்களாக மழை பெய்யவில்லை. இதனால் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து படிப்படியாக குறைய தொடங்கியது.
இந்நிலையில் இன்று குற்றாலம் பகுதியில் சாரல் மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. இதனால் மெயினருவியில் மிதமான அளவில் தண்ணீர் விழுகிறது. சுற்றுலா பயணிகள் கூட்டம் இன்றும் அதிகமாக இருந்தது.
மெயினருவியில் குளிக்க அலைமோதிய கூட்டத்தை படத்தில் காணலாம்.

Next Story
×
X