என் மலர்
செய்திகள்
X
குழித்துறை ரெயில் பாலத்தில் ரெயில்வே ஊழியர்கள் 2 பேர் ரெயில் மோதி பலி
Byமாலை மலர்25 Sept 2019 4:07 PM IST (Updated: 25 Sept 2019 4:07 PM IST)
குழித்துறை ரெயில் பாலத்தில் 2 ரெயில்வே ஊழியர்கள் ரெயில் மோதி பலியான சம்பவம் சக ஊழியர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாகர்கோவில்:
குழித்துறை தாமிரபரணி ஆற்றில் ரெயில் பாலம் உள்ளது. இந்த பாலம் அருகே தற்போது புதிதாக ஒரு பாலம் கட்டப்பட்டு வருகிறது.
இந்த பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இன்று பகல் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஜெய்சந்த் மீனா (வயது 32), கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த மதுசூதனன் ஆகிய 2 ரெயில்வே ஊழியர்கள் பழைய ரெயில் பாலத்தில் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக மும்பை- கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் வேகமாக வந்தது. இதைப்பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த ஜெய்சந்த் மீனாவும், மதுசூதனனும் ரெயில் மோதாமல் இருக்க ஓடி தப்ப முயன்றனர். ஆனால் அதற்குள் அவர்கள் மீது ரெயில் மோதியது. இதில் 2 பேரும் பரிதாபமாக உயிர் இழந்தனர். ஒருவரின் உடல் தண்டவாளத்திலும், இன்னொரு ஊழியரின் உடல் ஆற்றிலும் தூக்கி வீசப்பட்டது.
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தை பார்த்ததும் மற்ற ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இந்த விபத்து பற்றி நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கும், அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தனர்.
ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். சக ஊழியர்கள் கண் முன்பு ரெயில் மோதி 2 ரெயில்வே ஊழியர்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story
×
X