search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்தில் சிக்கிய அரசு பஸ்
    X
    விபத்தில் சிக்கிய அரசு பஸ்

    வாழப்பாடியில் இன்று அரசு-தனியார் பஸ்கள் பயங்கர மோதல் 15 பேர் படுகாயம்

    வாழப்பாடியில் இன்று தனியார் பஸ் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் 15 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    வாழப்பாடி:

    சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து சென்னைக்கு இன்று காலை ஒரு அரசு பஸ் புறப்பட்டுசென்றது.

    இந்த பஸ் வாழப்பாடி அருகேயுள்ள முத்தம்பட்டி இணைப்பு சாலை அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது வாழப்பாடிக்கு சென்று பயணிகளை ஏற்றிக்கொண்டு சேலம் நோக்கி வந்த தனியார் பஸ் திடீரென இணைப்பு சாலையில் இருந்து மெயின் ரோட்டுக்கு வந்தது.

    இதனை எதிர்பாராத அரசு பஸ் டிரைவர் நிலை குலைந்தார். உடனே பஸ்சை திருப்ப முயன்றார். அதற்குள் தனியார் பஸ்சின் மீது அரசு பஸ் பயங்கரமாக மோதியது. இதில் தனியார் பஸ்சின் ஒரு பகுதி முழுவதும் சேதம் அடைந்து உருக்குலைந்தது.

    இந்த விபத்தில் தனியார் பஸ்சில் இருந்த 10-க்கும் மேற்பட்டோலும், அரசு பஸ்சில் இருந்த 5 பயணிகளும் என 15 பேர் படுகாயம் அடைந்தனர். இதை பார்த்த அந்த பகுதி மக்கள் வாழப்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசாரும் பொதுமக்களும் இணைந்து காயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த விபத்து குறித்து வாழப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாழப்பாடி நகர இணைப்புச் சாலையை இணைக்கும் சாலையை முத்தம்பட்டி அருகே விபத்துகளை தடுக்க, கிடப்பில் போடப்பட்டுள்ள ரவுண்டானா அமைக்கும் திட்டத்தை சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதி பொதுமக்கள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.


    Next Story
    ×