என் மலர்
செய்திகள்
X
பணிக்கு 10 நிமிடம் தாமதத்தால் ஆப்சென்ட் - தாம்பரம் பஸ் டெப்போவில் டிரைவர் தற்கொலை முயற்சி
Byமாலை மலர்19 Nov 2019 2:30 PM IST (Updated: 19 Nov 2019 2:30 PM IST)
தாம்பரம் பஸ் டெப்போவில் பணிக்கு 10 நிமிடம் தாமதமாக வந்த டிரைவருக்கு ஆப்சென்ட் போட்டதால் அவர் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தாம்பரம்:
படப்பை அருகே உள்ள வந்தவாஞ்சேரியை சேர்ந்தவர் ஹரிமுத்து. இவர் தாம்பரம் பஸ் டெப்போவில் டிரைவராக பணியாற்றி வருகிறார். வழக்கமாக தாம்பரம் - வல்லக்கோட்டை செல்லும் பஸ்சை ஓட்டி வந்தார்.
சம்பத்தன்று காலை டிரைவர் ஹரிமுத்து பணிக்கு 10 நிமிடம் தாமதமாக வந்ததாக தெரிகிறது. இதையடுத்து டெப்போ அதிகாரி அவருக்கு வருகை பதிவேட்டில் ‘ஆப்சென்ட்’ என்று குறிப்பிட்டார். மேலும் ஹரிமுத்து ஓட்டி வந்த பஸ்சை வேறு ஒரு டிரைவர் மூலம் இயக்கியதாகவும் தெரிகிறது.
இது தொடர்பாக ஹரி முத்து டெப்போ அதிகாரியிடம் வாக்குவாதம் செய்தார். திடீரென அவர் பாட்டிலில் இருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற ஊழியர்கள் ஹரிமுத்துவை மீட்டு சாமாதானப்படுத்தினர். இச்சம்பவத்தால் தாம்பரம் பஸ் டெப்போவில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து போக்குவரத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story
×
X