என் மலர்
செய்திகள்
X
கோவையில் 19-வது நாளாக கொரோனா தொற்று இல்லை- அதிகாரிகள் தகவல்
Byமாலை மலர்23 May 2020 10:25 AM IST (Updated: 23 May 2020 10:34 AM IST)
கோவையில் அனைத்து அரசுத்துறைகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கை காரணமாக 19-வது நாளாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை:
உலகத்தை கொரோனா வைரஸ் உலுக்கி வருகிறது. கோவை மாவட்டத்தில் கடந்த மார்ச் 19-ந் தேதி ஸ்பெயின் நாட்டில் இருந்து கோவை திரும்பிய கல்லூரி மாணவிக்கு முதல் முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்தவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் இந்த மாநாட்டில் பங்கேற்ற தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
கோவையில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவின் பேரில், கலெக்டர் ராஜாமணி தலைமையில் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. கோவையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சிங்காநல்லூரில் உள்ள இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி சிறப்பு கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டது.
ஆரம்பத்தில் பொதுமக்களிடம் இருந்து எடுக்கப்படும் சளி, ரத்த மாதிரிகள் சென்னை அனுப்பப்பட்டு, அங்குள்ள ஆய்வகத்தில் பரிசோதனை செய்யப்பட்டன. இதனால் முடிவுகள் தெரிய காலதாமதம் ஏற்பட்டது. இதையடுத்து கோவையில் கொரோனா பரிசோதனை ஆய்வகத்தை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.
கோவை மாவட்டத்தில் மொத்தம் 146 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதில் புற்றுநோய் இருந்த ஒருவர் மட்டும் சென்னையில் வைத்து பரிதாபமாக உயிரிழந்தர். மீதமுள்ள 145 பேரும் குணமடைந்து வீடு திரும்பினர். அவர்களை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கலெக்டர் ராஜாமணி, மருத்துவ குழுவினர் பழங்கள் கொடுத்து வழியனுப்பி வைத்தனர். கோவையில் கடந்த 3-ந் தேதி கடைசியாக கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. அதன்பின்னர் கடந்த 19 நாட்களாக கோவையில் புதியதாக கொரோனா தொற்று இல்லை.
இதுகுறித்து குறித்து சுகாதாரதுறை அதிகாரிகள் கூறியதாதவது:-
கோவையில் கொரோனா தொற்று அதிகரிப்பதை தடுக்க அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டன. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறுவதை தடுக்க கோவை மாநகராட்சியில் 100 வாகனங்கள் மூலம் பொதுமக்கள் இருக்கும் இடத்திற்கே காய்கறிகள் கொண்டு வந்து விற்பனை செய்யப்பட்டன. பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. மேலும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களிடம் சளி, ரத்த மாதிரி எடுக்கப்பட்டு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
கோவை மாவட்டத்தில் இதுவரை 13 ஆயிரம் பேர் வரை கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. இதில் 6 ஆயிரம் பேருக்கு தனியார் ஆய்வகங்களிலும், 7 ஆயிரம் பேருக்கு அரசு ஆய்வகங்களிம் பரிசோதனை செய்யப்பட்டது. தற்போது கோவை மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் என்று எதுவும் கிடையாது. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி கடந்த 13-ந் தேதி குணமடைந்தார். இதையடுத்து கொரோனா தொற்ற இல்லாத மாவட்டமாக கோவை அறிவிக்கப்பட்டது.
கடந்த 19 நாட்களாக கோவையில் புதியதாக கொரோனா தொற்று இல்லை. எனவே கோவை மாவட்டம் இன்னும் சில நாட்களில் பச்சை மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story
×
X