என் மலர்
செய்திகள்
X
கொரோனா தாக்கம் எதிரொலி: சிங்கார சென்னையை புறக்கணிக்கும் மக்கள்
Byமாலை மலர்18 Jun 2020 11:34 AM IST (Updated: 18 Jun 2020 11:34 AM IST)
கொரோனா தாக்கம் எதிரொலியாக மக்கள் சிங்கார சென்னையை புறக்கணித்து வருகின்றனர்.
தூத்துக்குடி:
கடந்த 40 நாட்களில் சென்னை மற்றும் சுற்றி உள்ள மாவட்டங்களில் இருந்து மட்டும் 8 ஆயிரத்து 396 பேர் இ-பாஸ் மூலம் பல்வேறு தனியார் வாகனங்களில் தூத்துக்குடி மாவட்டத்துக்கு வந்து உள்ளனர். அதே நேரத்தில் சிங்கார சென்னை என்றும், சென்னைக்கு சென்றால் பிழைத்துக் கொள்ளலாம் என்றும் கூறியவர்கள் தற்போது, சென்னையை விட்டு வெளியில் சென்றால் பிழைத்துக் கொள்ளலாம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு விட்டனர்.
இதனால் அதிக அளவில் இ-பாஸ் கேட்டு விண்ணப்பித்தனர். கார்களிலும், மோட்டார் சைக்கிளிலும், வேன்களிலும் தினமும் 100-க்கும் மேற்பட்டவர்கள் மாவட்டத்துக்கு வருகின்றனர். அவர்களை மாவட்ட எல்லையிலேயே தடுத்து தனிமைப்படுத்தும் முகாமுக்கு அனுப்பி கொரோனா பரிசோதனை செய்து வருகின்றனர்.
தூத்துக்குடி-சென்னை இடையே தனியார் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானம் கடந்த மாதம் இறுதியில் சேவையை தொடங்கியது. ஒரு விமானம் மட்டுமே இயக்கப்பட்டு வந்தது. தற்போது சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. பலர் தொடர்ந்து ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகளை பதிவு செய்து காத்து இருக்கின்றனர்.
இதனால் அந்த விமான நிறுவனம் கடந்த வாரம் முதல் 2 விமானங்களை இயக்கி வருகிறது. சென்னையில் இருந்து புறப்பட்டு காலை 11-15 மணிக்கு தூத்துக்குடிக்கு வரும் விமானம், தூத்துக்குடியில் இருந்து 11-50 மணிக்கு புறப்பட்டு சென்னைக்கு செல்கிறது. அதேபோன்று மற்றொரு விமானம் சென்னையில் இருந்து புறப்பட்டு மதியம் 12-35 மணிக்கு தூத்துக்குடிக்கு வருகிறது. தூத்துக்குடியில் இருந்து 1-15 மணிக்கு புறப்பட்டு சென்னைக்கு செல்கிறது.
இந்த விமானங்களில் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு நேற்று 60 பேரும், நேற்று முன்தினம் 70 பேரும் வந்தனர். சராசரியாக ஒவ்வொரு விமானத்திலும் சென்னையில் இருந்து 60 பேர் தினமும் வந்து கொண்டு இருக்கின்றனர். அதே நேரத்தில் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு செல்வோரின் எண்ணிக்கை தலைகீழாக உள்ளது. நேற்று 26 பயணிகள் மட்டுமே சென்னைக்கு சென்றனர்.
அதேபோன்று எந்த முக்கிய பிரமுகர்களோ, தொழில் அதிபர்களோ இதுவரை விமான பயணத்தை மேற்கொள்ளவில்லை. குடும்பம், குடும்பமாக மக்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக மட்டுமே வந்து கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் மக்கள் சென்னையை தற்போது புறக்கணித்து வருவது உறுதியாகி உள்ளது. இந்த நிலை எப்போது மாறும்? என்ற ஏக்கத்தில் மக்கள் காத்து இருக்கின்றனர்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. பெரும்பாலும் தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தொழில் நிமித்தமாக சென்னையில் வசித்து வருகின்றனர். இவர்கள் கொரோனா பரவலால் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டு இருக்கின்றனர்.

Next Story
×
X