என் மலர்
செய்திகள்
X
காவல் நிலையத்தில் இருந்த இருசக்கர வாகனங்கள் மாயம்- 3 காவலர்கள் ஆயுதபடைக்கு மாற்றம்
Byமாலை மலர்13 Aug 2020 7:18 PM IST (Updated: 13 Aug 2020 7:18 PM IST)
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில், வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 25-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், மாயமானது தொடர்பாக, ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உட்பட மூன்று காவலர்கள் ஆயுதபடைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மார்த்தாண்டம்:
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில், வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 25க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், மாயமானது தொடர்பாக, ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உட்பட மூன்று காவலர்கள் ஆயுதபடைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்த காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் பல காணாமல் சென்றுள்ளதாகவும், விற்கப்பட்டதாகவும் வந்த புகாரை அடுத்து, காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
இதில் 25க்கும் மேற்பட்ட வாகனங்கள் மாயமானது தெரிய வந்தது. இதையடுத்து, 3 காவலர்களையும் ஆயுத படைக்கு மாற்றி உத்தரவிட்டார். இது குறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

Next Story
×
X