என் மலர்
தமிழ்நாடு
X
வறுத்தெடுக்கும் கோடை வெயில்- வேகமாக குறையும் வீராணம் ஏரி நீர்மட்டம்
Byமாலை மலர்24 April 2022 4:54 PM IST (Updated: 24 April 2022 4:54 PM IST)
கடந்த சில நாட்களாக வீராணம் ஏரி பகுதியில் வெயில் வறுத்தெடுத்து வருகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே வெயில் கொளுத்தி வருவதால் ஏரியின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
காட்டுமன்னார் கோவில்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி ஆகும்.
இந்த ஏரியால் சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் ராட்சத குழாய் மூலம் சென்னை நகர மக்களுக்கு தாகத்தை தீர்ப்பதில் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த ஏரிக்கு பருவகாலங்களில் பெய்யும் மழை மற்றும் மேட்டூர் அணை மூலம் தண்ணீர் வரத்து இருக்கும். கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் வீராணம் ஏரி 3 முறை நிரம்பி வழிந்தது. இதனால் வீராணம் ஏரி பாசன பகுதியில் நெல் அறுவடை முடிந்துள்ளது. எனவே பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. என்றாலும், சென்னை மாநாகர் குடிநீருக்காக தினசரி தண்ணீர் ராட்சத குழாய் மூலம் அனுப்பப்படுகிறது.
கடந்த சில நாட்களாக வீராணம் ஏரி பகுதியில் வெயில் வறுத்தெடுத்து வருகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே வெயில் கொளுத்தி வருவதால் ஏரியின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. நேற்று 42.50 அடியாக நீர்மட்டம் இருந்தது. அது இன்று 42.45 அடியாக குறைந்தது. ஏரிக்கு நேற்று 241 கனஅடி நீர் வந்தது. அது இன்று 181 கன அடியாக குறைந்தது.
சென்னை மாநகர் குடிநீருக்காக வீராணம் ஏரியிலிருந்து 61 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.

Next Story
×
X