என் மலர்
தமிழ்நாடு
தீபாவளி பண்டிகையையொட்டி செங்கல்பட்டு மாவட்ட பாதுகாப்பு பணியில் 500 போலீசார்
- எந்தவித சிறு விபத்தும் ஏற்படாமல் இருக்க முக்கிய சந்திப்புகளில் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- அனைத்து வழிபாட்டு தலங்கள் அருகிலும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் பிரணீத் நிருபர்களிடம் பேசும்போது கூறியதாவது:-
தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு பயணம் செய்யும் மக்கள், ஜி.எஸ்.டி. சாலை வழியாக செல்வதற்கு ஏதுவாக போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்கவும், எந்தவித சிறு விபத்தும் ஏற்படாமல் இருக்கவும் முக்கிய சந்திப்புகளில் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 20 போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட முக்கிய சந்திப்பு பகுதிகள் மற்றும் மாவட்ட எல்லைகளில் வாகன சோதனை சாவடிகளில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க 24 இடங்களில் வாகன சோதனை பணிக்காக போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ்நிலையம், மார்கெட் மற்றும் அனைத்து வழிபாட்டு தலங்கள் அருகிலும் குற்றம் எதுவும் நடைபெறாமல் இருக்க கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 20 போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட அனைத்து பகுதியிலும் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க 33 இடங்களில் குற்ற ரோந்து பணிக்காக போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 3 உட்கோட்டத்திலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்கவும், குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கவும் ட்ரோன் சர்வலைன்ஸ் பணிக்காக போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு சாய் பிரணீத் தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, 5 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 20 போலீஸ் சூப்பிரண்டுகள், 90 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் என சுமார் 500 போலீசார் சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.